9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை குட்நியூஸ்!
சென்னை: 9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Recommended Video

ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட வகுப்பு பயிலும் மாணவர்கள் விருப்பப்பட்டால், பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே 9, 10 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தலைதூக்க தொடங்கியுள்ளது.
ஒரு சில பள்ளிகளிலும் ஏராளமான மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என்றும், ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications