இன்றைக்கு கலெக்சன் எகிறிரும்..! அதிமுக கூட்டத்தில் கைவிட்ட ‘லோக்கல் கை’..! புரட்டி எடுத்த ர.ர.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் தொடர்பாக இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற திருடனை அந்த கட்சியினர் கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொதுகுழு, செயற்குழு கூட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் சென்னையில் தொடங்கி நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

அதிமுக கூட்டம்

அதிமுக கூட்டம்

முன்னதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொலைபேசிக்கு அனுமதி இல்லை என அறிவுறுத்திய நிலையில், வெளியேறினார். கடந்த முறை அதிமுக கூட்டத்தில் பா.ஜ.க. குறித்து பொன்னையன் பேசியது சர்ச்சையானதால் இந்த முறை யாரும் செல்போன் எடுத்து வரக்கூடாது என தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்ற முடியாது என்று கூறி மைத்ரேயன் வீடு திரும்பினார் மைத்ரேயன்.

பொதுக்குழு செயற்குழு கூட்டம்

பொதுக்குழு செயற்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது, இதனை முன்னிட்டு இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் எனும் பெயரில் சசிகலா ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 திடீர் பரபரப்பு

திடீர் பரபரப்பு

இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டுமென வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அலுவலகம் முன்பு கூடிய ஏராளமான ஓபிஎஸ் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக கட்சி அலுவலக வாயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கூட்டத்தின் போதும் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பினர்.

Recommended Video

    ஒற்றை தலைமை வேண்டும்..கொதிக்கும் அதிமுகவினர் - வீடியோ
     பிக்பாக்கெட் திருடன்

    பிக்பாக்கெட் திருடன்

    இந்த களேபரங்களுக்கு இடையேயும் ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதிமுக நிர்வாகிகள் அரங்கினுள் கூட்டத்தில் இருந்த நிலையில் கட்சி அலுவலகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பெண்கள் திரண்டு இருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் நுழைந்து அதிமுக தொண்டர் உடன் இருந்த மணி பர்சை முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் அந்த திருடனை கையும் களவுமாகப் பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர் . இதையடுத்து ராயப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட அந்த திருடன் என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+