டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட மிக கடினமான கேள்வி.. பதில் என்ன தெரியுமா?
சென்னை: A, B, C, X, Y மற்றும் Z ஆகிய ஆறு பேர் வெளியே பார்த்தபடி ஒரு வட்டமேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள் என்று ஆரம்பித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்வி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த நவம்பர் 1 ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 1,647 மய்யங்களில் நடந்தது. சுமார் 4.90 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தொழிலாளர் உதவி ஆய்வாளர், வணிக வரி துணை அலுவலர், இள நிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர், ஜெயிலர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 43 காலி இடங்களையும், கூட்டுறவு பால் சங்கங்களின் முது நிலை ஆய்வாளர், இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 803 காலி இடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது .

இந்த தேர்வு சென்னையில் 173 மய்யங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1,647 மய்யங்களில் நவம்பர் 1 ம் தேதி நடந்தது. இதில் கேட்கப்பட்ட ஒரு சவாலான மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் கேள்வி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த கேள்வி மற்றும் பதிலை பார்ப்போம்.
கேள்வி: A, B, C, X, Y மற்றும் Z ஆகிய ஆறு பேர் வெளியே பார்த்தபடி ஒரு வட்டமேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள்.
* Y மூன்றாவது இளைய நபர்.
* X மற்றும் Yக்கு இடையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள்.
* Z, 20 வயதுடைய Cக்கு இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
* இரண்டாவது வயதான நபருக்கு 24 வயது.
* Z என்பவர் A மற்றும் Cஐ விட மூத்தவர். ஆனால் மிக மூத்தவர் அல்ல.
* C என்பவர் Xக்கு அருகில் வலது புறத்தில் அமர்ந்துள்ளார்.
* B என்பவர் Aவை விட மூத்தவர், Zஐ விட மூத்தவர்.
* A மற்றும் Z ஆகியோர் அருகில் உள்ள அண்டை வீட்டார் அல்ல.
* இவர்களில் இளையவரின் வயது 20க்கும் குறைவானது.
* A என்பவர் Yயை விட இளையவர் அல்ல எனில், A இன் சாத்தியமான வயது என்னவாக இருக்கும்?
விருப்பங்கள்:
* (A) 25 வருடம்
* (B) 20 வருடம்
* (C) 27 வருடம்
* (D) 22 வருடம்
* (E) விடை தெரியவில்லை

தீர்வு விளக்கம்:
இந்தக் கேள்வியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து கொள்வோம்.
முதலில் வயது அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டும்.
1. ஆறு பேரும் வெவ்வேறு வயதுடையவர்கள்.
2. Y மூன்றாவது இளையவர்.
3. C-ன் வயது 20.
4. இரண்டாவது மூத்தவரின் வயது 24.
5. Z, A மற்றும் C-ஐ விட மூத்தவர். ஆனால் மிகவும் மூத்தவர் அல்ல.
6. B, A மற்றும் Z-ஐ விட மூத்தவர்.
7. மிகவும் இளையவரின் வயது 20-க்குக் குறைவு.
8. A, Y-ஐ விட இளையவர் அல்ல
இரண்டாவதாக வயது வரிசையை அமைப்போம்
1. மிகவும் இளையவர் X 20-க்குக் குறைவு
2. C 20
3. Y 20-ஐ விட அதிகம்
4. A ?
5. இரண்டாவது மூத்தவர் Z 24
6. மிகவும் மூத்தவர் B 24-ஐ விட அதிகம்
கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்:
- C-க்கு 20 வயது.
- Y மூன்றாவது இளையவர்.
- A, Y-ஐ விட இளையவர் அல்ல.
- Z-க்கு 24 வயது. அவர் இரண்டாவது மூத்தவர்.
- A, Z-ஐ விட இளையவர்.
எனவே A-வின் வயது 20-க்கும் 24-க்கும் இடையில் இருக்க வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் அதற்குப் பொருத்தமான வயது 22.
2. இறுதி விடை
- (A) 25 வயது ❌
- (B) 20 வயது ❌
- (C) 27 வயது ❌
- (D) 22 வயது ✅
- (E) விடை தெரியவில்லை ❌
TNPSC Group 2 தேர்வுக்கான சரியான விடை: D - 22 வயது.
தேர்வு எழுதுவோர் இதுபோன்ற கேள்விகளில் முதலில் வயது வரிசையைத் தனியாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும், அப்படி செய்தால் குழப்பம் இல்லாமல் கணக்கிட்டு விடையைக் கண்டுபிடிக்க முடியும். இது போன்ற கேள்விகளில் இதுவே முக்கியமான அணுகுமுறை.


Click it and Unblock the Notifications
