‛‛கொதித்துப்போன திருமாவளவன்’’.. ஆம்ஸ்ட்ராங் கொலையால் தமிழக அரசு - போலீஸ் பரபர குற்றச்சாட்டு
சென்னை: ‛‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை'' எனக்கூறி தமிழக அரசு மற்றும் போலீஸ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் அருகே சிலருடன் பேசி கொண்டிருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நேற்று இரவும், நேற்றும் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் வைக்கப்பட்டு இருந்த சென்னை ராஜீவ் அரசு மருத்துவமனை மற்றும் அவரது வீடுகளை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் வழக்கு தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் உடற் கூறாய்வுக்கு பிறகு நேற்று ஆம்ஸ்ட்ராங்கின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அயனாவரம் இல்லத்துக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலை அவரது உடல் பந்தர் கார்டன் மைதானத்தில் வைக்கப்பட்டது. குஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் தான் நேற்று மருத்துவமனைக்கு சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு இன்று மாயாவதி நேரில் அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று மாயாவதி வந்தபோது பந்தர் கார்டன் மைதானத்தில் இருந்தார். அப்போது அவர் தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திருமாவளவன் கூறியதாவது:
‛‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்.
அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். சாமானியன் முதல் தவைர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற படுகொலைகள் நடைபெறுவது அதரி்ச்சியளிக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றி ஆராய வேண்டும்.'' என வருத்தத்தை பதிவு செய்தார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications