வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு மாறுகிறதா? சம்பளதாரர்களுக்கு ஷாக் தகவல்.. போச்சு
சென்னை: புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான நேரம் மாற்றி அமைக்கப்படாது, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. பல லட்சம் சம்பளதாரர்கள் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் அதை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு வகையான வரி செலுத்தும் முறை இருப்பதால் வரி செலுத்துவோருக்கு வெவ்வேறு காலக்கெடு உள்ளது. கணக்குகள் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் பிற வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அசல் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டியவர்கள் அதாவது audit செய்த பின் வரி செலுத்துவோர், மதிப்பீட்டு ஆண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தணிக்கை அறிக்கையை முதலில் சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.

சர்வதேச பரிவர்த்தனைகளைக் கொண்ட வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டின் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ITR ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
அதே சமயம் தனிநபர் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியைத் தவறவிட்டால், அவர்கள் தாமதமான வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம். தற்போதைய வருமான வரிச் சட்டத்தின்படி, தாமதமான வருமானத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆகும். இதேபோல், அசல் அல்லது தாமதமான ITR இல் தவறு ஏற்பட்டால், ஒரு தனிநபர் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்யலாம். திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 ஆகும். வருமான வரிச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ், தாமதமாக ரிட்டன் தாக்கல் செய்வதற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரி சட்டம்
ஆனால் நாளை தாக்கல் செய்யப்படும் புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான நேரம் மாற்றி அமைக்கப்படாது, காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது, தற்போது புதிய வருமான வரிச் சட்டம் 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப தற்போதுள்ள வழக்கில் உள்ள சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பின்வரும் முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளனர்.
வருமான வரி சட்டத்தை எளிமையாக்க உள்ளனர். எல்லோரும் புரிந்துகொள்ளும்படி வருமான வரி மாற்றப்படும். வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும். புதிய தளம், செயலி உருவாக்கப்படும். தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும்.
பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றுவார்கள். பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள். இப்போது நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் வழக்கத்தில் இருக்கும். ஆனால் பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்படலாம்.
பட்ஜெட்டில்தான் ஸ்லாப் மாற்றப்பட்டது என்பதால் வருமான வரி ஸ்லாப் இந்த சட்டத்தில் மாற்றப்படாது. அதே சமயம் புதிய வருமான வரி regimeல் புதிதாக சலுகைகள் சேர்க்கப்படலாம். அதாவது வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம். முந்தைய சிக்கலான சட்டத்திற்குப் பதிலாக நாட்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதாவை அரசு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் தாக்கல் செய்ய உள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications