என்னங்க நடக்குது? எங்க போனாலும் நோட்டமிடுறாங்க! திமுகவின் அந்த மூவ்! பதிலுக்கு ஆளுநர் ரவி "ஆக்சன்"!
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பிற்கும் ஆளுனர் ஆர். என் ரவிக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. நீட் விவகாரம் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீவிர மோதலாக உருவெடுத்துள்ளது. அதே சமயம் நீட் தேர்வு விவகாரம் தாண்டி வேறு ஒரு விஷயமும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
Recommended Video

தமிழ்நாட்டில் ஆளும் திமுக தரப்பால் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் ஏற்கவில்லை. ஏற்கனவே இந்த மசோதாவை அவர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் சட்டசபையில் ஏற்றப்பட்ட மசோதாவை அவர் ஏற்காமல் கிடப்பில் போட்டு இருக்கிறார்.
இது போக இன்னும் 6 மசோதாக்களை ஆளுநர் ஏற்காமல் கிடப்பில் போட்டு இருக்கிறார். இதுதான் இரண்டு தரப்பிற்கும் மோதல் வெடிக்க காரணம்.

மோதல் விஸ்வரூபம்
இந்த மோதல் சமீபத்தில் விஸ்வரூபம் எடுத்தது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்தார். வழக்கமாக கொடுக்கப்படும் இந்த விருந்தில் நேற்று திமுக கலந்து கொள்ளவில்லை. ஆளும் திமுக மட்டுமின்றி திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இந்த விருந்தை புறக்கணித்தன. இது மோதலை மேலும் பெரிதாக்கி உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தாண்டி வேறு ஒரு விஷயமும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

ஆளுநர் வழிபாடு
அதாவது சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபத்தில் ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன் வழிபாடு நடத்தினார். தனக்கு நெருக்கமான சிலருடன் சென்று அவர் அங்கு வழிபாடு நடத்தினார். அவர் வழிபாடு நடத்தி 5 நாட்களில் அயோத்தி மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. இது தனி நீதிபதி கொடுத்த உத்தரவின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தி மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது.

என்ன உத்தரவு
இந்த நிலையில், அயோத்தி மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம். வேலுமணி, அறநிலையத்துறை இந்த இடத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்று உத்தரவிட்டார். இந்த நிலையில் மண்டபத்தை கட்டுப்பாட்டில் எடுக்க சென்ற அதிகாரிகளுக்கு எதிராக பாஜகவினர் கடுமையாக போராட்டம் செய்தனர்.

அரசு ஆக்சன்
அரசின் இந்த ஆக்சனை ஆளுநர் நோட் செய்ததாக கூறப்படுகிறது. நாம் சென்ற சில நாட்களில் அரசு இப்படி ஆக்சன் எடுத்து இருக்கிறதே என்று ஆளுநர் தரப்பு யோசித்து இருக்கிறது. நாம் எங்கு செல்கிறோம் என்பதை எல்லாம் நோட்டமிடுகிறார்களா.. அதை வைத்துதான் இந்த மூவை செய்து இருக்கிறார்களா என்று ஆளுநர் வட்டாரம் யோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்தே ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டத்திற்கு உட்பட்டு பதில்
தமிழ் புத்தாண்டிற்கு எல்லாம் ஆளுநர் தேநீர் விருந்து அழைப்பு விடுக்கமாட்டார். ஆனால் இந்த முறை தமிழ்நாடு திமுக அரசு தமிழ் புத்தாண்டை தை 1 அன்றுதான் கொண்டாடுகிறது. இதனால் சித்திரை 1 அன்று திமுகவை விருந்துக்கு அழைத்து ஆளுநர் பதிலடி கொடுத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே திமுக தரப்பும் அந்த விருந்தை புறக்கணித்து உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தமிழ்நாட்டில் ஆளும் தரப்பு ஆளுநரின் தேநீர் விருத்தை புறக்கணித்தது பற்றிய பஞ்சாயத்து ஏற்கனவே டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

மம்தா மாடல்
தமிழ்நாடு அரசின் இந்த மூவ் பற்றி டெல்லியில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறதாம். ஆளுநர் ரவிக்கு இன்னும் வலுவாக்கி பல்வேறு பதிலடியை கொடுக்க ஆளும் திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜக்தீப்பிற்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு கடுமையான மூவ்களை எடுத்தார். அந்த மம்தா பாணி பதிலடியை திமுக வரும் நாட்களில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications