அவங்களுக்கு உள்ளேயே ட்விஸ்ட் ஆகிட்டாங்களே.. விஜய் இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்க மாட்டார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி உள்ளேயே பெரிய அளவில் பிரச்சனை வெடித்து உள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்து உள்ளது.

1. தமிழக வெற்றிக் கழகம் உள்ளே தற்போது சில முக்கிய தலைவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. புஸ்ஸி ஆனந்த் - ஆதவ் அர்ஜுனா இடையே மோதல் நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் கடுமையான கருத்து வேறுபாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

TVK Vijay

2. நேற்று நாள் முழுக்க புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக ஆதவ் அர்ஜுனா ஆட்கள் போஸ்டுகளை செய்தனர். ஆதவ் அர்ஜுனன் ஆதரவு நிர்வாகிகள் பலர் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். அவர் பொதுச்செயலாராக சரியாக செயல்படவில்லை. கட்சி நிர்வாகியாக சரியாக இயங்கவில்லை.

3. கட்சிக்கு பிரச்சனை என்றதும் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். அதன்பின் வந்தவரும் கூட கரூர் விவகாரம் தொடர்பாக பேசவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி கூட செலுத்தவில்லை என்றெல்லாம் விமர்சனங்களை வைத்தனர்.

4. அதோடு பொதுச்செயலாளராக அவர் கட்சி கமிட்டியை அமைக்கவில்லை. ஒரு சில குழுக்கள் தவிர கட்சி சார்பாக வேறு குழுக்கள் எதையும் புஸ்ஸி ஆனந்த் அமைக்கவே இல்லை. அவர் ஒரு பொதுச்செயலாளராக மோசமாக செயல்படுகிறார், என்று நேற்று நாள் முழுக்க புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக ஆதவ் அர்ஜுனா ஆட்கள் போஸ்டுகளை செய்தனர்.

5. இன்னொரு பக்கம் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிராகவும் புஸ்ஸி ஆனந்த் ஆட்கள் போஸ்ட் செய்து வருகின்றனர். அவர் பாஜகவிடம் நெருக்கமாகிவிட்டார். பாஜகவிடம் தஞ்சம் அடைந்துவிட்டார் என்றெல்லாம் புஸ்ஸி ஆனந்த் ஆதரவு நிர்வாகிகள் போஸ்ட் செய்து வருகின்றனர்.

6. இன்னொரு பக்கம் ஜான் ஆரோக்கியசாமி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஜான் ஆரோக்கியசாமி விஜயை தவறாக வழி நடத்துகிறார். அவர் தவறான ஆலோசனைகளை வழங்குகிறார். மோசமான முடிவுகளை எடுக்கிறார் என்றெல்லாம் ஜான் ஆரோக்கியசாமி மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

7. அதேபோல் அருண் கட்சிக்கு வந்த பின் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு நிர்வாகியாக அவர் சரியாக செயல்படவில்லை. அவரின் முடிவுகள் முறையாக இல்லை. அவர் செயல்படும் விதம் தவறாக உள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

8. இப்படி தமிழக வெற்றிக் கழகம் கட்சி உள்ளேயே பெரிய அளவில் பிரச்சனை வெடித்து உள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சி உள்ளேயே பெரிய அளவில் பிரச்சனை வெடித்து உள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்து உள்ளது. விஜய் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மோதல் உச்சம் அடைந்து உள்ளது. ஒரே ஒரு கரூர் சம்பவத்திற்கு பின் கட்சியே கடந்த 20 நாட்களாக இயங்காமல் உள்ளது.

விஜய் இதை ஒரு தலைவராக கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அவரும் அப்படி கட்டுப்படுத்த முடியாமல் உள்ளார். யாரை வைத்துக்கொள்வது.. யாரை விடுவது என்று தெரியாமல் விஜய் இருக்கிறார். அவர் என்ன மாதிரியான முடிவை எடுப்பார் .. கட்சியில் வலிமையான முடிவை எடுப்பாரா.. புதிய தலைவர்களை கொண்டு வருவாரா? புதிய குழுக்களை நியமிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+