பிரதமர் பேச்சில் இருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது.. சு.வெங்கடேசன் ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிப்பூர் கலவரம் குறித்து 79 நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் ஏற்பட்ட கவலரம் தற்போது வரை நீடிக்கிறது.

The world laughs at crocodile tears: Su Venkatesan MP Tweet

இந்நிலையில் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, எதிர் தரப்பினர் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தின் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, "ஜனநாயகத்தின் கோவிலுக்கு அருகில் நிற்கும் என் இதயம் முழுதும் கோபமும் வலியும் நிறைந்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது.

மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்து 79 நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக நேற்றுத்தான் இச்சம்பவம் குறித்து மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த 2 மாதங்களாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த வீடியோவிற்குப் பிறகுதான் மவுனம் கலைத்தார் மோடி.

இந்த நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக மணிப்பூர் சம்பவம் குறித்துப் பேசியது தொடர்பாக தி டெலிகிராப் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடங்கி 79 நாட்களுக்குப் பிறகு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடியின் பேச்சை முதலைக்கண்ணீர் என விமர்சித்துள்ளது தி டெலிகிராஃப் இதழ்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "79 நாட்கள் ஆகி இருக்கிறது 56 இன்ச் அகலத் தோலைக் கிழித்து வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு... மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலம் ஆன பிறகு... பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக்கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது." என விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+