ராமதாஸ் மனு தள்ளுபடி.. அன்புமணி நடத்தும் பொதுக் குழுவுக்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக பொதுக் குழு கூட்டம் நாளை நடத்தப்படும் என்று அன்புமணி வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இருவரும் ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்த நிலையில், சிறுது நேரத்திற்கு முன்பு விசாரணை நிறைவடைந்தது. ஆனால், உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால் பொதுக்குழு நடத்த தடையில்லை என அன்புமணி தரப்பில் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, அன்புமணி தரப்புக்கு நீதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், பொதுக் குழுவுக்கு தடைகோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அன்புமணியின் பொதுக் குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், அன்புமணி அதற்கு உடன்படவில்லை. இதைத்தொடர்ந்து, போட்டியாக ஆகஸ்ட் 9 ஆம் தேதியான நாளை பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிராக ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

there-is-no-ban-to-the-public-committee-run-by-anbumani-madras-high-court

அன்புமணியின் பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக நீதிபதி அறிவித்தார். மாலை 5.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகினார். காணொலி வாயிலாக ராமதாஸ் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து விசாரணை தற்போது நிறைவடைந்தது. இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் கார் மூலமாக புறப்பட்டார்.

நீதிமன்றம் வழக்கின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்காததால் நாங்கள் பொதுக்குழு நடத்த ஆட்சேபனை இல்லை என்றும், நாளை திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தவோம் என்று அன்புமணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பாமக பொதுக்குழு விவகாரத்தில் அன்புமணி தரப்புக்கு மீண்டும் நீதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

அன்புமணியின் பொதுக்குழு அறிவிப்புக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் மீண்டும் நீதிபதி அழைப்பு விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, பொதுக் குழுவுக்கு தடைகோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அன்புமணியின் பொதுக் குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்புமணி மற்றும் ராமதாஸ் தரப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்த நிலையில், பொதுக் குழுவை அன்புமணி நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+