கலாஷேத்ரா பாலியல் புகாரில் செம ட்விஸ்ட்.. 10 மாணவிகள் போலீஸில் நேரில் ஆஜராகி பகீர் வாக்குமூலம்
சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் 10 மாணவிகள் போலீஸில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அடையாறில் உள்ளது கலாஷேத்ரா நடன கல்லூரி. பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கல்லூரி படிப்பு போல் இளநிலை, முதுநிலை பட்டமாக ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இது மத்திய அரசின் கீழ் நடந்து வரும் ஒரு அமைப்பாகும்.

இங்கு பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் ஹரி பத்மன், ஸ்ரீநாத், சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன் ஆகிய 4 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா மாணவிகள் புகார் கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இதில் தனித்தனியே அனைத்து மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஹரிபத்மனின் ஜாமீன் மனுக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஹரி பத்மனின் மனைவி திவ்யா கூறுகையில் என் கணவர் மீது வேண்டுமென்றே சில பெண் ஆசிரியைகள் பொறாமையின் காரணமாக பெண் பிள்ளைகளை தூண்டிவிட்டு புகார் கொடுக்க வைத்துள்ளனர்.
போராட்டத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவர்கள் எல்லாம் இளநிலை படிக்கும் மாணவிகள். என் கணவர் முதுநிலை மாணவருக்குத்தான் பாடம்எடுக்கிறார். என் கணவர் இந்த காலகட்டத்தில் தவறாக நடந்தார் என புகார் கூறிய மாணவி எங்கள் வீட்டிற்கெல்லாம் வந்திருக்கிறார். என் குழந்தை பிறந்தநாளுக்குக் கூட வந்திருந்தார்.
ஆனால் அவர் ஏன் இப்படி மாற்றி பேசுகிறார் என தெரியவில்லை. என் கணவரை விரைவில் விடுதலை செய்ய வேண்டும். எந்தவித ஆதாரமும் இல்லாமல் என் கணவர் மீது புகார் கூறியுள்ளார்கள் என்றார். இந்த நிலையில் ஹரிபத்மனுக்கு ஆதரவாக கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அபிராமியும் களமிறங்கினார்.

எனக்கு வகுப்பெடுத்த ஹரி பத்மன் சார் நல்லவர். பெண்களிடம் அப்படி நடந்து கொண்டதில்லை. அவரை மூத்த பேராசிரியர் பாராட்டியதால் பொறாமையின் காரணமாக அவர் மீது பொய்யான புகாரை கூறியிருப்பதாக அபிராமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புகார் கூறிய மாணவிகளிடம் விசாரணை நடத்திய நிலையில் 162 மாணவிகளிடமும் அடையாறு மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
மகளிர் ஆணைய பரிந்துரையின்படி 162 மாணவிகளுக்கும் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று கடந்த 2 வாரங்களில் 10 மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.சில மாணவிகள் எங்களுக்கும், இந்த புகாருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். நாங்கள் எந்த விதமான பாதிப்புகளும் உள்ளாகவில்லை, எங்களது ஆசிரியர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலாஷேத்ரா பாலியல் புகாரில் மிகப் பெரிய திருப்பமாக இந்த மாணவிகளின் வாக்குமூலம் அமைந்துள்ளது. எஞ்சிய மாணவிகளிடமும் வாக்குமூலம் பெற காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் பிறகே கலாஷேத்ராவில் நடந்தது என்ன என்பது குறித்து தெரியவரும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications