Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

₹10000 SIP-ஐ லேசாக எடுத்தவர்கள் இன்று என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அந்த 1 முடிவு இப்போது கோடி கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த ஒரு விஷயம் என்னவென்றால் அது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுதான்.. குறிப்பாக எஸ்ஐபி (SIP) என்ற முறையில் மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை சேமிப்பது, பெரிய தொகை இல்லாதவர்களுக்கும் செல்வம் உருவாக்கும் வாய்ப்பை தந்துள்ளது.. ஒரு காலத்தில் முதலீடு என்பது பெரிய பணக்காரர்களுக்கே என்ற எண்ணம் இருந்தது.. ஆனால் இன்று ஒரு சாதாரண சம்பளதாரருக்கும் இந்த வாய்ப்பு திறந்திருக்கிறது.. அதை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்.

30 வருஷத்துக்கு முன்னாடி, அதாவது 1990-களில் யாராவது ஒருவர் மாதம் ₹1000-ஐ ஒரு நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்திருந்தால், அதன் இன்றைய மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது..

SIP Investment

SIP - லாபம் கோடிக்கணக்கில்

சில திட்டங்களில் சராசரியாக 12 முதல் 15 சதவீத வருமானம் கிடைத்திருக்கிறது என்ற கணக்கீட்டின்படி, அந்த முதலீடு இன்று ₹1 கோடி அல்லது அதற்கு மேல் சென்றிருக்கலாம்.. இதில் கவனிக்க வேண்டியது, அந்த நபர் மொத்தம் முதலீடு செய்தது வெறும் ₹3.6 லட்சம் மட்டுமே என்பது தான்.. ஆனால் கிடைத்திருக்கும் லாபமோ பல மடங்கு அதிகமாகும்.

இந்த வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் கூட்டு வட்டி ஆகும்.. நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு கிடைக்கும் லாபம் மீண்டும் முதலீடாக மாறி, அந்த லாபத்திற்கும் மீண்டும் லாபம் சேர்ந்து, வருஷம் செல்ல செல்ல பணத்தின் மதிப்பு வேகமாக உயர்கிறது.. ஆரம்பத்தில் இது பெரிதாக தெரியாது. ஆனால் 10 அல்லது 15 ஆண்டுகள் கடந்த பிறகு அதன் உண்மையான தாக்கம் தெளிவாக தெரியும்.

பெரிய தொகை சேமிப்பு

இன்றைய வாழ்க்கையில் ₹1000 என்பது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதில்லை.. ஒரு ஹோட்டல் செலவு அல்லது ஒரு சினிமா செலவாகவே அது பார்க்கப்படுகிறது.. ஆனால் அதையே ஒழுங்காக சேமித்து முதலீடு செய்தால், அது உங்கள் எதிர்காலத்திற்கு ஒரு வலுவான ஆதாரமாக மாறும்.. குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வூதியம் போன்ற தேவைகளுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்..

பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த காலத்தில், பணத்தை வெறும் சேமிப்பில் வைத்திருப்பது போதாது.. அதை வளர்க்கும் வழியை தேர்வு செய்வது அவசியம்.. சின்ன தொகை என்று நினைத்து அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து முதலீடு செய்வது தான் நீண்ட காலத்தில் பெரிய செல்வத்தை உருவாக்கும் முக்கியமான வழியாகும்.

ரூ.1000 சின்ன தொகை

சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் சரி, சின்ன கடை வைத்திருப்பவராக இருந்தாலும் சரி, இந்த எஸ்ஐபி முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கிறது.. வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் ஒதுக்கினாலும், அது காலப்போக்கில் பெரிய தொகையாக மாறும்..

இன்று 1000 ரூபாய் என்பது சின்ன தொகை போல தோன்றலாம்.. ஆனால் அதை தவிர்ப்பது தான் பெரிய தவறு.. ஏனென்றால், நாளை "ஒருவேளை அப்போதே தொடங்கியிருந்தால்?" என்று வருந்த வேண்டாம் என்றால், இன்று தொடங்கும் இந்த சிறிய முடிவு தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+