சென்னையில் பாடம் சொல்லி கொடுத்த டீச்சர் வீட்டிலேயே.. 20 வயது இளைஞன் நடத்திய மறக்க முடியாத பாடம்
சென்னை: சென்னை திருநின்றவூரில் தனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியை வீட்டிலேயே கைவரிசை காட்டிய திருடனை போலீசார் கைது செய்தனர். ஆசிரியை வீட்டில் மொத்தம் 40 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில், 24 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருநின்றவூர் தாசர் புரம் 3-வது தெருவை சேர்ந்த 58 வயதாகும் கிருபை ஜான் அந்த பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கிருபை ஜானின் மனைவியான 55 வயதாகும் தீபமும், கணவர் வேலை செய்யும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.

கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு இருவரும் பள்ளிக்கு வேலைக்காக சென்றனர். பின்னர் உணவு இடைவேளையில் இருவரும் வீட்டிற்கு வந்து சாப்பிட வந்தனர். வீட்டிற்கு வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆசிரியர் கிருபை ஜான் உடனடியாக சென்னை திருநின்றவூர் போலீசில் புகார் அளித்தார் இன்ஸ்பெக்டர் சாய் கணேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தபோது திருநின்றவூர் சுதேசி நகர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சத்யா (20) என்பவர் ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை- பணம் திருடியது உறுதியானது. இதையடுத்து நேற்று சத்யாவை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.
பின்னர் இளைஞன் சத்யாவிடம விசாரித்த போது ஆசிரியை தீபம் என்பவரிடம் அதே பள்ளியில் சத்யா 7-ம் வகுப்பு வரை படித்ததும். தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை வீடு என்று தெரியாமல் திருடியதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார். 24 பவுன் நகைகளை தான் திருடினேன் என கூறினார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட சத்யாவிடம் இருந்து 24.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி, 2 செல்போன்கள், ரூ.60 ஆயிரத்து 610 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கைது செய்யப்பட்ட சத்யா திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று கடந்த மாதம் 23-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார் என்று போலீசார் விசாரணை குறித்து தெரிவித்தனர்.
தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை வீட்டியே அவரது முன்னாள் மாணவன் பணம் மற்றும் நகையை திருடிய சம்பவம் சென்னை திருவெற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications