டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.. இந்த முறை நினைத்தே பார்க்க முடியாத போட்டி விகிதம்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 வின் 645 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவித்தது. அதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் 28 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு எழுத போகிறார்கள். இதனை கணக்கிட்டு பார்த்தால் ஒரு பணியிடத்திற்கு 858 பேர் போட்டியிடுகிறார்கள். இது மிகப்பெரிய விகிதம் ஆகும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும், குரூப் 1, குரூப் 2, குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வு நடத்தும். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பில், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். அவர்களில் ஒருவரின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேரில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 பேர் ஆண்கள் ஆவார். அதேநேரம் ஆண்களை விட பெண்களே தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்துள்ளார்கள். குரூப் 2 தேர்வுக்கு 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்கள் விண்ணப்பித்துள்ளார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
38 மாவட்டங்களில் வரும் ஞாயி அன்று தேர்வு நடைபெற உள்ளது. தேர்வினை கண்காணிக்கும் பணியில் 1905 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கு செல்ஃபோன், கைக்கடிகாரம் (Smart Watches), ப்ளுடூத் அல்லது தகவல் தொடர்பு சாதனங்கள் அல்லது தகவல் தொடர்பு சாதனமாக பயன்படுத்தத்தக்க துணைக் கருவிகளை கொண்டு செல்ல அனுமதியில்லை என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் ஆய்வு அலுவலர் ஒருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வுக் கூடத்தினை எளிதில் அடைவதற்கு ஏதுவாக போக்குவரத்து துறையின் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்வாரியத் துறைக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் உடல் நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தேர்வு நாளன்று அதாவது 28.09.2025 முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வுக் கூடத்திற்கு தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 9 மணிக்கு முன்னரே செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications