ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானத்துக்கு நோட்டீஸ்! DD Next Level பாடலால் நெருக்கடி!
சென்னை: நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சீனிவாசா கோவிந்தா என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' (DD Next Level). பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா வழங்கும் இந்தப் படம் வரும் 16 ஆம் தேதி வெளியாகிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஸ்ரீநிவாச கோவிந்தா' பாடல், திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை அவமதிக்கும் விதமாக உள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நடிகர் சந்தானம் மற்றும் டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிறுவனத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சந்தானம், டிடி நெக்ஸ்ட் லெவல் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சீனிவாசா கோவிந்தா என்று தொடங்கும் பாடலை நீக்க வேண்டும் என்று நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாடலில் பெருமாளைக் கிண்டல் செய்ததாக எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த சந்தானம், "நான் பெருமாள் பக்தர். கடவுள் பாடல் வைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அந்தப் பாடலை வைத்தேன். அதில் கிண்டல் செய்யவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. பெருமாளை எனக்குப் பிடிக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications