சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டம்மி".. பாஜக பற்றி பேசி கொண்டே வந்த திருமா.. டக்கென பாமக பக்கம் திரும்பி.. செம அட்டாக்..!

திருமாவளவன் சிதம்பரத்தில் பிரச்சாரம் செய்தார்

Google Oneindia Tamil News

சென்னை: "பாஜகவுடன் இணைந்துள்ள கட்சிகள் தங்கள் தனித்தன்மையை இழந்து பல நாட்கள் ஆகிவிட்டன.. சொல்லப்போனால் அதிமுக என்கிற பாஜக, பாமக என்கிற பாஜக.. என்று அவர்கள் பாஜகவின் பினாமி கட்சிகளாகவே மாறிவிட்டன.. இன்று திமுகவை எதிர்த்து போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டன.." என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. திமுக கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ள நிலையில், வழக்கம்போலவே இந்த முறையும் திருமாவளவனின்பிரச்சாரங்கள் அனல் தெறிக்கின்றன..

வழக்கம்போலவே இந்த முறையும் பாஜகவை உண்டு, இல்லை என செல்லுமிடமெல்லாம் போட்டு தாக்கி கொண்டிருக்கிறார்.. இதுகுறித்த தகவல்களையும் ஆதாரங்களுடன் தெரிவித்து வருகிறார்.

 6 சீட்

6 சீட்

அதிலும் பாஜகவை இங்கே காலூன்ற விட்டுவிடக்கூடாது, சின்ன கட்சிதானே, அந்த கட்சிக்கு என்ன வாக்கு வங்கி இருக்கிறது என்று கணக்கு போடாதீங்க.. இங்குதான் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.. நான் 6 சீட் திமுக கூட்டணியில் வாங்கி கொண்டதற்கு காரணமே, பாஜக எக்காரணத்தை கொண்டும் இங்கே வேரூன்றி விடக்கூடாது என்பதற்காகத்தான் என்று பேசி வருகிறார். அப்படித்தான் சிதம்பரத்தில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் திருமாவளவன்..

 பாமக

பாமக

அப்போது பாஜகவை பற்றி பேசி கொண்டிருந்தவர் திடீரென பாமகவையும் பிரச்சாரத்தின்போது உள்ளே இழுத்து போட்டு தாக்கினார். பாமக, மற்றும் பாஜக கட்சிகளின் தலைவர் பதவி என்பது அதிகாரம் இல்லாத டம்மி போஸ்ட்.. ஆனால், இதுவே விசிகவில் பாருங்க, எல்லா பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் அதிகாரத்தை அள்ளி தரப்பட்டுள்ளது.. பாமகவும், பாஜகவும் இரட்டை குழந்தைகள்.. பாஜகவில் தலைவர் பொறுப்பை வகித்த கடலூரை சேர்ந்த பங்காரு லட்சுமணன் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    VCK leader Thol. Thirumavalavans Biography | Oneindia Tamil
    பாஜக

    பாஜக

    பாஜகவுடன் இணைந்துள்ள கட்சிகள் தங்கள் தனித்தன்மையை இழந்து பல நாட்கள் ஆகிவிட்டன.. சொல்லப்போனால் அதிமுக என்கிற பாஜக, பாமக என்கிற பாஜக.. என்று அவர்கள் பாஜகவின் பினாமி கட்சிகளாகவே மாறிவிட்டன.. இன்று திமுகவை எதிர்த்து போட்டியிடும் தகுதியை இழந்துவிட்டன..

     234 தொகுதிகள்

    234 தொகுதிகள்

    மோடி தாராபுரத்தில் பேசும்போது, 234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன் என்றாரே.. 234 தொகுதிகளிலும் மோடி நிற்கிறார் என்றால் 234 தொகுதிகளிலும் மோடி தோற்கடிக்கப்படுவார்.. இங்கே வந்து அவ்வையார் பாட்டை பாடுகிறார்.. திருக்குறளை எழுதி படிக்கிறார்.. பாரதியார் பாட்டை படிக்கிறார்.. வீரவேல், வெற்றிவேல் என்று அழைக்கிறார்.. எல்லாம் நாடகம்.. ஆனால் மறைமுகமாக சமஸ்கிருதத்தை திணிக்கிறார்.. இந்தியை திணிக்கிறார்.. இந்த சூழ்ச்சியை நாம் முறியடிக்க வேண்டும்" என்றார்.

    English summary
    Thirumavalavan campaign in Chidambaram Consititution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X