விசிகவினர் சில தொகுதிகளில் சரியாக வேலை செய்யல.. கோபத்தில் கொந்தளித்த திருமாவளவன்
சென்னை: தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த தேர்தலில் விஜய் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே விஜய் பெருவாரியாக பெறுவார் எனவும் திருமாவளவன் கூறினார்.
விசிக தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டு, ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளை தவிர..

தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்ற தகவல்கள் தெரியவந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. களப்பணி ஆற்றிய அத்தனை தோழர்களுக்கும் என் பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
5 ஆண்டுக்கு ஒருமுறை சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பலர் பொதுத் தொகுதிகளில் தங்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பது உண்டு. அப்படி இந்த வாய்ப்பு வழங்கப்படாமல் ஏமாற்றம் அடைவது ஒரு தொடர்கதையாக இருக்கும். ஆகவே பொதுத் தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றுவது தவிர்க்க முடியாததாகிறது. பொதுத் தொகுதிகளில் மட்டுமல்ல, மொத்தமாக, ஏனென்றால் நாம் குறைவான தொகுதிகளை பெறுகின்றபோது..
புதிய புதிய வேட்பாளர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் நான் புறந்தள்ள முடியாது. அந்த கோரிக்கை வலுவாக எழுந்து வருகிறது. நாம் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் கட்சியையும் வலுப்படுத்த முடியும். அதிகாரத்தை நோக்கி நகர நகர, முன்னணி வேட்பாளர்கள் இடையே போட்டி வலுக்கிறது. 2001 ஆம் ஆண்டில் நான் தேடி தேடி வேட்பாளர்களை போட்டேன்.
2006இல் கூட நம்மிடத்திலே வேட்பாளர்கள் குறைவாக தான் இருந்தார்கள். 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வேட்பாளர்கள் நம்மிடம் அதிகரித்தனர். 2021 தேர்தலில் ஒரு வேட்பாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 10 பேர் இருக்கும் அளவுக்கு போட்டி அதிகரித்தது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஒரு கட்டாயம் எனக்கு இருக்கிறது.
இதன் காரணமாகவே ஷா நவாஸ் மற்றும் எஸ் எஸ் பாலாஜிக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தராமல் போனது. இதனை சமூக வலைத்தளங்களில் திரித்து பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. இந்த தேர்தலில் வெற்றி பெற விஜய்க்கு வாய்ப்பு இல்லை. திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை மட்டுமே விஜய் பெருவாரியாக பெறுவார்.
திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகள் என்பது தமிழக அரசியல் களத்தில் எப்போதும் உள்ளன. விஜய் ஆட்சி அமைப்பதற்கும், தனித்த சக்தியாக உருவெடுப்பதற்கும் வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம்












Click it and Unblock the Notifications