உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு: காங்., சிபிஎம் தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்! திருமாவளவன் சுளீர்
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள உயர் ஜாதியினருக்கு வழங்கப்பட்டுள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீர்ப்பு குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங்கிரஸ் மற்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மசோதா
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தின் 103வது பிரிவில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய மசோதாவை கடந்த 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மத்திய பாஜக அரசு. ஆனால் பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்டோர் மேல் முறையீடு செய்திருந்தனர். அதில், இந்த இட ஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையான கட்டமைப்பை மீறும் வகையில் உள்ளதாக கூறியிருந்தனர்.

தீர்ப்பு
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லிலித் தலைமையில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, நீதிபதி எஸ்.ரவீந்திர பட், நீதிபதி பெலா எம்.திரிவேதி மற்றும் நீதிபதி ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டன. தீர்ப்பில், 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் அரசின் நடவடிக்கை செல்லும் என்றும் அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்றும், 2 நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளதால் மத்திய அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும்.

10 சதவிகிதம்
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், 10 சதவிகித இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங்கிரஸ் மற்றம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைபாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு தரும் பாஜக அரசின் சட்டம் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான தீர்ப்பாகும். நீதியின் பெயரால் இழைக்கப்பட்ட மாபெரும் உச்சபட்ச அநீதியாகும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து விசிக சார்பில் பேரமர்வு விசாரணைக்குச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விசாரணை
இந்த வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களும், இன்னொரு நீதிபதியான ரவீந்திர பட் அவர்களும் இந்த சட்டம் செல்லாது என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் தற்போது இந்த சட்டம் செல்லும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளைப் பல ஆண்டுகளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் கிடப்பில் போட்டிருந்தது. தலைமை நீதிபதியாக லலித் அவர்கள் பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் இதற்கான அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இட ஒதுக்கீடு
இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்காமல் தொடரச் செய்தபோதே இதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யாது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொண்டு பாஜக அரசும் அவசர அவசரமாக எல்லா துறைகளிலும் 10% இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகளை நிறைவு செய்யாமல் பல்லாயிரக்கணக்கான பதவிகளை பின்னடைவுக் காலிப் பணியிடங்களாக வைத்திருக்கும் மோடி அரசு, இந்த 10% இட ஒதுக்கீட்டை மட்டும் தனிக் கவனம் செலுத்தி நடைமுறைப்படுத்தியது.

தலைமை நீதிபதி
ஒருபுறம் இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று பேசிக்கொண்டே இந்து மதத்தில் இருக்கும் ஓ பி சி மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக அரசு முன்னேறிய சாதியினருக்காக மட்டுமே செயல்படும் அரசாக இருக்கிறது என்பதற்கு இதுவொரு சான்று ஆகும். இந்த சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி ரவீந்திர பட் மற்றும் தலைமை நீதிபதி யு.யு. லலித் ஆகியோரும்கூடத் தங்களின் தீர்ப்பில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றே கூறியுள்ளனர். இது சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடே ஆகும்.

விசிக வழக்கறிஞர்
"எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் உள்ளனர். அவர்களை 10% இட ஒதுக்கீட்டில் பங்கேற்க முடியாமல் தடுப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. அந்த அடிப்படையிலும் இந்த சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று விசிக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா தனது வாதத்தில் குறிப்பிட்டார். இவ்வழக்கில் சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் லலித், ரவீந்திர பட் ஆகிய இருவரும் இந்த வாதத்தின் அடிப்படையில் தான் தமது தீர்ப்பை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐந்து நீதிபதிகள்
பெரும்பான்மைத் தீர்ப்பை எழுதியிருக்கிற நீதிபதிகள் இந்த வாதத்தை நிராகரிப்பதற்கு விளக்கம் எதையும் கொடுக்கவில்லை. இட ஒதுக்கீடு அளவு 50 %க்கு மேல் போகக்கூடாது என்று இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதை ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு மாற்ற முடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் உச்சவரம்பு குறித்து இந்த அமர்வு முடிவு செய்திருப்பதும் சட்டப்படி ஏற்புடையதல்ல.

அரசியல் களம்
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்ப வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் மனு தாக்கல் செய்த திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தனி நபர்களும் இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வர் என நம்புகிறோம். இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைகளை நீதிமன்றத்தில் தீர்த்துவிட முடியாது, முதன்மையாக அது அரசியல் களத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

தோழமை கட்சிகள்
இந்துக்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஓபிசி இந்துச் சமூகப் பிரிவினருக்கு எதிரான பாஜகவின் இந்த 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து முறியடிக்க சமூக நீதியின்பால் அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அழைக்கிறோம். 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications