ஏற்றத்தாழ்வை எதிர்த்தவர் முஹம்மது நபி.. மீலாது நபியை உலக சகோதரத்துவ நாளாக கடைபிடிப்போம் -திருமாவளவன்
சென்னை: நபிகள் நாயகம் பிறந்தநாளான மீலாது நபி நாள் 'உலக சகோதரத்துவ நாளாகக்' கடைபிடிப்போம் என இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தியில், "நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபி தினத்தில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1400 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் நபிகள் நாயகம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நல்வழிப்படுத்த மகத்தான நன்னெறிகளைப் போதித்தார். இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அவரின் நம்பிக்கையாகும். இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிட தேவையில்லை என்றும்; குறிப்பாக, மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார்.
இறைவனுக்கு மனித வடிவத்தில் உருவம் அமைப்பதும் அதனையே இறைவனென்று நம்பி வணங்குவதும் உண்மையான இறைவழிபாடு ஆகாதென்று வலுவாக நம்பியவர். அதனால், இறைவனுக்கு இணை வைத்தலும் உருவ வழிபாடும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் போதித்தவர். இறைவனுக்கு உருவம் படைப்பது இறைவனை அவமதிப்பதாகும் என போதித்த அவர், தன்னையும் முன்னிறுத்தாத உயர்நெறியை வழங்கியவர்.
இறைவனுக்கு உருவம் படைக்கக் கூடாதென கூறிய அவர், தனது உருவத்தையும் எத்தகைய சூழலிலும் முன்னிறுத்தக் கூடாதென வலியுறுத்தினார். அந்த அடிப்படைக் கருத்தியலை எக்காலத்திலும் திரித்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியவர். இன்றும் அத்தகைய திரிபுநிலை அடையாத ஒரு கோட்பாடாகவே இஸ்லாம் விளங்குகிறது.
இதுவே நபிகள் நாயகம் அவர்களின் இணையற்ற தலைமைத்துவத்திற்கு மகத்தான சான்றாகும். அத்துடன், சகோதரத்துவமே மானுடத்தின் மீட்சிக்கு அடிப்படை என்பதைப் போதித்தவர். உலக மாந்தர்கள் யாவரும் உயர்வு - தாழ்வு என்னும் பாகுபாடுகளின்றி, பகை - மோதல் ஏதுமின்றி ஒரே குலமாக வாழ்வதற்கு சகோதரத்துவம் தான் இன்றியமையாதது என வலியுறுத்தியவர்.
அத்தகைய சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம். இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல் வாய்ந்த மகானின் பிறந்தநாளான 'மீலாது நாளை' "உலக சகோதரத்துவ நாளாக' கடைபிடிப்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மீலாது நபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications