வந்துட்டு போன உடனே.. வடஇந்தியர்கள் சர்ச்சை.. பாஜகவின் பிளான் இதுதான்.. திருமாவளவன் பொளேர்
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசிய திருமாவளவன் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாக பாஜக வதந்தி பரப்பவுதன் பின்னணியில் எதிர்க்கட்சிகள் ஒண்றியணைக்கூடாது என்பதுதான் என்றார்.
சென்னை: அண்மையில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார். எதிர்க்கட்சிகள் எல்லாமே ஒரேமேடையில் அணிவகுத்தன. இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஸ்டாலின் பேசினார்.இந்நிலையில் தான் வடமாநிலத்தவர் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பாஜகவினர் வதந்தி பரப்புவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி உருவாகுமா இல்லை என்பது தெரியவில்லை. அதேநேரம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக வாய்ப்பு இல்லை என்றே தற்போது வரை தெரிகிறது ஏனெனில் இரண்டு கட்சிகளுமே பாஜகவை போல் காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்ததால் கடும் கோபம் அடைந்த மம்தா பானர்ஜி 2024ம் ஆண்டு தேர்தலில் தனித்து காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார். இதற்கிடையே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதை காங்கிரஸ் கட்சி தான் முதலில் வரவேற்றது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சி மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

தலைவர்கள் பங்கேற்பு
தேசிய விவகாரங்களில் ஒன்றிணையை மறுப்பதாக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்த நாள் விழா மார்ச் 1ம் தேதி சென்னையில் நடந்தது, அந்த கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தன. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார். காஷ்மீரில் இருந்து வந்த பரூக் அப்துல்லா கலந்து கொண்டார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கலந்து கொண்டார். இதேபோல் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கிலேஷ் யாதவும் கலந்து கொண்டார்.

பாஜகவிற்கு எதிர்ப்பு
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியதுடன், மூன்றாவது அணி கரைதேறாது என்பதை வெளிப்படையாக சொன்னார். காங்கிரஸ் இல்லாத ஒரு அணி பாஜகவிற்கு சாதகமாகும் என்றும் கூறினார். இதுபற்றி திருமாளவன் கூறும் போது, தளபதி அவர்களின் பிறந்த நாள் விழா பேச்சில் இவ்வளவு உறுதிப்பாடும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

காங்கிரஸ் கட்சி
தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழிகாட்டக்கூடிய வகையில், முற்போக்கு சக்திகளுக்கு ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்கின்ற வகையில், ஆழ்ந்த தெளிந்த உரை. இதை செய்யக்கூடாது, இதைத்தான் செய்ய வேண்டும். மூன்றாவது அணி வெற்றி பெறாது. காங்கிரஸ் இல்லாமல் எந்த முயற்சி எடுத்தாலும் அது வெற்றி பெறாது.

துணிச்சல்
இப்படி சொல்வதால் காங்கிரஸிடம் இருந்து திமுகவிற்கு எந்த பயனும் இல்லை. நாட்டின் மீது உள்ள அக்கறையால் நம்முடைய தளபதி அவர்கள் பேசுகிறார்கள். மக்கள் மீது அக்கறையால் பேசுகிறார்கள்.அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி கவலைப்படவில்லை. எவ்வளவு பேர் ஆதரவு தருவார்கள் என்பதை பற்றி கவலைப்படவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொல்கின்ற துணிச்சல் உள்ளவராக இருக்கிறார். எதற்காக சொல்கிறார். சனாதன சக்திகள் வலிமை பெற்றுவிடக்கூடாது. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லியிருக்கிறார்.

அரசியல் உத்தி
பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன தீமைகள் இருக்கிறதும் அவ்வளவும் இங்கே வந்து குவியும். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி இங்கு வந்து போன பிறகு பாஜகவினர் இப்பபடி பதிவு செய்கிறார்கள், தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள். வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அங்கேபோய் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தேஜஸ்வி வாழ்த்து தெரிவிக்கிறார். அது வெறும் பீகார் அரசியல் அல்ல. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நிலையில், நாம் சேர்ந்துவிடக்கூடாது என்று தடுப்பதற்கான அரசியல் உத்தி" என திருமாளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications