ஆணவக் கொலை வன்முறை இல்லைனு சொல்றது அறியாமை! நடிகர் ரஞ்சித்தை விமர்சித்த திருமா
சென்னை: ஆணவக் கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். ஆணவக் கொலை வன்முறை அல்ல, அது ஒரு அக்கறைதான் என நடிகர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
சுயமரியாதை திருமணம், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி போன்றவைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் திரையரங்குகளில் வெளியானது.

குறிப்பிட்ட சாதியினரை பற்றி மோசமான கருத்துகள், சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் கருத்துகள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்ததாக டிரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு ரஞ்சித் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். நாடகக் காதல் நடத்தி வைக்கவே சில கும்பல், அலுவலகம் அமைத்து வேலை செய்வதாகவும் தான் நாடக காதல் என சொல்லும் போது மட்டும் தன்னை ஜாதி வெறியனாக பார்க்கிறார்கள் என்றும் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள தியேட்டரில் கவுண்டம்பாளையம் படத்தை நடிகர் ரஞ்சித் தனது படக் குழுவுடன் பார்த்தார். அப்போது கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள் படம் பார்க்காமல் பேசக் கூடாது.
என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புறமுதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள். ஆணவக் கொலை குறித்து கேட்கிறீர்கள். பெற்றவர்களுக்குதான் வலி தெரியும். பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என அக்கறையினால் வரும் கோபம் தான் அது, வன்முறை அல்ல என கூறினார்.
ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் நடிகர் ரஞ்சித் ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஞ்சித்தின் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ராமசந்திர ஆதித்தனாரின் 90ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர்த் தூவி மரியாதையை செலுத்தினார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆணவக் கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுகிறது. படம் எடுத்து லாபம் சம்பாதிக்க சிலர் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசி வருகிறார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வைத்து அரசியல் நகர்வுகளை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விருப்பமில்லை. அவரது கொலைக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications