எச்.ராஜாவின் இன்னொரு குரல்.. விஜய் பேச்சில் திமுக வெறுப்பு மட்டுமே இருக்கு.. திருமாவளவன் விமர்சனம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் பேச்சை எச்.ராஜா மற்றொரு குரலாகவே பார்க்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய்யின் ஒவ்வொரு நிகழ்வும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டுள்ளதாக கூறிய திருமாவளவன், விஜய்யின் திட்டம், நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், அண்ணாவும், எம்ஜிஆர்-ம் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. அதேபோல் களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் தவெக எதிர்க்கப் போவதில்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது.

எங்களுக்கு நிறையா வேலை இருக்கு. எம்ஜிஆர், ஜெயலலிதா சொல்லியதை போல் திமுக ஒரு தீய சக்தி.. தீய சக்தி.. தீய சக்தி.. தவெக ஒரு தூயசக்தி என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக மகாத்மாக் காந்தி பெயரால் இயங்கி கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதற்கு வேறு சான்று தேவையில்லை. பாஜகவின் அற்பமான அரசியல் இது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மகாத்மா காந்தி. அவருடன் எங்களுக்கு கருத்து முரண்பாடு இருந்தாலும், விடுதலை போராட்டத்தை மதிக்கிறோம்.
அதனால் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கிறோம். அதனால் டிசம்பர் 24ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடக்கும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும். அதேபோல் விஜய்யின் ஒவ்வொரு செயல்பாடும், பேச்சும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாகக் கொண்டு உள்ளது. விஜய்க்கு நாட்டைப் பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
திமுக வெறுப்பை மட்டுமே பரப்புரை செய்வதை தனது கடமையாகக் கொண்டு செயல்படுகிறார். இதனை மக்கள் கவனித்து வருகின்றனர். அவரது திட்டம், நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக தேர்தலில் அது வெளிப்படும். நாங்கள் திமுகவிற்கு ஆதரவாகப் பேசுவதாகத் தோன்றும். திமுக மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லியவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அது வரலாறாக இருக்கிறது. ஜெயலலிதா, எச்.ராஜா ஆகியோர் சொன்னதையே விஜய்யும் பேசுகிறார். இன்னும் சொல்லப் போனால் எச்.ராஜாவின் மற்றொரு குரலாகத்தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications