திருமாவளவன் எங்கே? நேற்று இரவு முதல் மர்மம்.. வேளச்சேரி வீட்டிலும் இல்லை, ஹோட்டலும் காலி
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றிரவு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், அவரின் வேளச்சேரி வீட்டிற்கு செல்லாமல், ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். ஆனால் தற்போது அந்த ஹோட்டலிலும் திருமாவளவன் இல்லை. இதனால் விசிக தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், இதுவரை ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தவெக கூட்டணி எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 116ஆக இருக்கிறது.

பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், விசிக உடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்று மாலையே விசிகவின் உயர்நிலைக் கூட்டம் கூடி ஆலோசனை நடத்திவிட்டது. இதன்பின் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு நடத்தினார். இதன்பின் திருமாவளவன் இன்று காலை தனது முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்று இரவில் இருந்தே திருமாவளவன் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் வேளச்சேரி வீட்டிலும் இல்லை என்று தெரிகிறது. ஸ்டாலினை பார்த்த பின் ஹோட்டல் ஒன்றில் தங்கிய திருமாவளவன், தற்போது அங்கும் இல்லை. அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் விசிக தொண்டர்கள் குவிந்திருக்கின்றனர்.
விசிக அலுவலகத்திற்கு புதிய இருக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருந்தாலும் திருமாவளவன் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று மாலையும் கூட உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பின் தன்னுடைய பாதுகாப்பிற்காக வந்த பேட்ரோல் வாகனங்களை அனுப்பிவிட்டு திருமாவளவன் தனியாக பயணித்தார். இதனால் திருமாவளவனின் நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதன் பின்னணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications