Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 "மெசேஜ்" தந்த திருமா.. என்னது "உதயசூரியனா".. குழம்பும் பாமக.. திமுக ப்ளான்?.. சொல்றது யார் பாருங்க

திமுக கூட்டணியில் விசிக இடம்பெறுமா என்பது குறித்து ரவீந்திரன் துரைசாமி பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் எம்பி தேர்தலில், திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா? அல்லது விசிக இடம்பெறுமா? என்பது குறித்தெல்லாம் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன... அந்தவகையில், மத்தியில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைத்து பாஜகவுக்கு எதிராக தேர்தலை சந்திக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் அறிவித்திருந்தார்..

 ரவீந்திரன் துரைசாமி

ரவீந்திரன் துரைசாமி

இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்ற விவாதம் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது... இப்படிப்பட்ட சூழலில், செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2024-ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருந்தார்.. அப்படியானால் பாமகவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமக வரக்கூடுமோ? அப்படியே பாமக கூட்டணியில் இணைந்தால் விசிக நிலைப்பாடு என்ன? என்ற சந்தேகங்களும் நிலவி வருகிறது.. விசிக நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது குறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் நம் ஒன்இந்தியா தமிழ் சார்பாக கேட்டோம்..

 ஐயா டாக்டர்

ஐயா டாக்டர்

அதற்கு ரவீந்திரன் துரைசாமி நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களின் சுருக்கம்தான்: "திமுக கூட்டணியை நோக்கி பாமக நகர்கிறது... காங்கிரஸின் சீட்டுக்களை குறைத்துவிட்டு, நமக்கு சீட் தருவார்கள் என்று பாமக எதிர்பார்க்கிறது.. எனவே, ஸ்டாலினை நோக்கி பாமகவினர் நகருகிறார்கள்.. ஆனால், பாமகவுக்கு திமுக வாய்ப்பு தருமா என்பது உறுதியாக தெரியவில்லை.. அப்படியே திமுகவுடன் கூட்டணி என்றாலும், குறைந்தபட்சம் 4 அல்லது 5 சீட்டுக்களை பாமக கேட்கும்.. பாமக கூட்டணியில் இருந்தால், திருமாவளவன் கூட்டணியில் இருப்பாரா என்று தெரியவில்லை.. விசிகவை திமுக வெளியேற்ற முடியாது.. வெளியேற்றவும் விரும்ப மாட்டார்கள்..

 சான்ஸஸ்

சான்ஸஸ்

திமுக எதிர்ப்பு அரசியலை பாமக பெரிய அளவுக்கு கொண்டு செல்லாது என்றாலும், தன்னுடைய சீட்டுக்களை பாமகவுக்கு திமுக தாரைவார்க்காது.. ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற முடியாது என்ற நிலைமையில்தான் அன்புமணி இந்த முடிவை எடுத்திருக்கலாம்.. ஆனால், ஸ்டாலின் இறங்கி வந்து பாமகவுக்கு வாய்ப்பு தருவது மிக குறைவு.. மொத்தத்தில், பாமக கூட்டணிக்கு வருவதால் திமுகவுக்கு லாபம் பெரிதாக இல்லை.. ஒருவேளை திமுகவுக்கு வந்தால் பாமகவுக்கு லாபம் இருக்கலாம்.

 ரவிக்குமார்

ரவிக்குமார்

எனினும், இப்போதுகூட திருமாவளவன் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்தி விட்டார்.. "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இல்லை.. செல்வாக்கும் இல்லை, அதிமுக கரைந்து போய்விட்டது.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பலவீனப்பட்டு போய்விட்டார்" என்று திருமாவளவனே ஓபனாக சொல்லிவிட்டார்.. அதேசமயம், திமுகவுடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்பதையும் அந்த பேச்சில் அழுத்தமாக வலியுறுத்திவிட்டார்.. ஆனால், இந்த முறை கூட்டணியில் எத்தனை சீட்டுகள் விசிகவுக்கு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

 திருமா அடையாளம்

திருமா அடையாளம்

ஒருவேளை 2 சீட் தந்து, 2 இடங்களிலுமே உதயசூரியனிலும் நிற்க சொல்லலாம்.. காரணம், கடந்த முறை உதயசூரியனில் நின்ற ரவிக்குமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றார்.. இத்தனைக்கும் விழுப்புரம், விசிகவின் செல்வாக்கு குறைந்த தொகுதிதான்.. சிதம்பரம் தொகுதி என்பது திமுகவுக்கும் செல்வாக்கு நிறைந்த இடம், விசிகவுக்கும் செல்வாக்கு நிறைந்த இடம். ஆனாலும், திருமாவளவன் மிகக்குறைவான வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்றால், அந்த தொகுதியில் திருமாவின் அடையாள அரசியலுக்கு எதிர்ப்பு இருக்கிறது என்றே பொருள்.

உதயசூரியன்

உதயசூரியன்

பொதுத்தளத்தில் நின்று, உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்போது, திருமாவளவனையும், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே நில்லுங்கள் என்று திமுக வற்புறுத்தவும் வாய்ப்புள்ளது.. திமுக - விசிக இடையேதான் நல்ல இணக்கமான சூழல் நிலவி வருகிறதே, ஒருவருக்கொருவர் தாங்கி செல்கிறோமோ, அதனால், அடையாள அரசியல் வேண்டாம், உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கும்படியே கேட்டுக் கொள்ள வாய்ப்பு இருக்கலாம்.. எப்படி பார்த்தாலும், பாமகவுக்காக விசிகவை இழக்க திமுக தயாராக இல்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+