"ராஜதந்திரம்".. செம கெத்தாக களத்தில் இறங்கிய விசிக.. நழுவவிடாமல் கூட்டணியை பாதுகாத்த திமுக.. சபாஷ்
உதயசூரியன் சின்னத்தில் மறைமலைநகரில் விசிக போட்டியிடுகிறது
சென்னை: திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு, எதிர்பார்த்த மற்றும் போதிய இடங்கள் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், களப்பணியில் வேகம் காட்ட ஆரம்பித்துவிட்டன.. ஜரூரான தேர்தல் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் திமுகவை பொறுத்தவரையில் ஒவ்வொரு தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவிலேயே போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும்... ஆனால் மிக முக்கிய தொகுதிகளை அவர்களுக்கு சாதகமாக ஒதுக்கி தரும்..
அதேசமயம், ஒதுக்கப்பட்ட அந்த இடங்களில் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் நிர்ப்பந்தப்படுத்தப்படும்..

தனிச்சின்னம்
தனிச்சின்னம் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் கட்சிகளுக்கு தர்மசங்கடமான நிலைமையே இதனால் ஏற்படும்.. இதுபோன்ற விஷயங்களில் சிக்காமல் நழுவிவிட ஜாக்கிரதையாக காய் நகர்த்தும் கட்சிகளில் ஒன்றுதான் விசிக.. மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை போல விசிகவை திமுக கையாள முடியாது.. காரணம், திருமாவளவனுக்கு நிறைய ஆதரவு திமுகவில் இருக்கிறது.. அதனால், ஒருவித மென்மைப்போக்குடனேயே விசிகவிடம் எப்போதுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

விசிக திருமா
இந்த முறையும் அப்படித்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க திமுக முயற்சி எடுத்துவிடுமோ விசிக முந்திக் கொண்டது.. தனிச்சின்னத்தில் போட்டி என்பதிலும் உறுதியாக நின்றது.. மற்றொருபுறம் ஒரு சில தொகுதிகளை விசிகவும், மதிமுகவும் இரு கட்சிகளும் சேர்ந்து கேட்கவும், இழுபறி இதனாலும் நீடித்தது..

விசிக
எனினும் இந்த முறை விசிகவுக்கு பெரும்பாலான பிரதான இடங்களே கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது... 18, 45, 72, 107, 135, 190 போன்ற வார்டுகளை விசிக பெற்றுவிட்டது.. அதேபோல, மதுரை திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் வார்டு எண் 9, விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உதயசூரியன்
அதேபோல, மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சி சார்பில் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் தென்னவன் என்பவர் போட்டியிடுகிறார்.. அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.. இதற்கு காரணம், 10வது வார்டில் முன்னாள் நகரமன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்த கோபி கண்ணன் என்பவர் போட்டியிடுகிறாராம்.. அவர் வசதி படைத்தவர் என்பதால் தாராளங்களை காட்டக்கூடும்.. அவருக்கு டஃப் தர வேண்டுமானால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்தால்தான் உதயசூரியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன்
முன்பெல்லாம் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்து, தனிச்சின்னத்தை கூட்டணிகள் கோரி வந்த நிலையில், சூழலுக்கேற்ப, தொகுதிகளின் நிலைக்கேற்ப தங்களின் முடிவுகளையும் அதற்கேற்றபடி தளர்த்தி கொண்டு வருவது கூட்டணியுடனான இணக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது.. அதுமட்டுமல்ல, இந்த முறை அதிமுகவில் கூட்டணியே இல்லாமல் போய்விட்டது.. பாஜக, பாமக தனித்து போட்டியிட, அதிமுகவும் தனி ஆளாக களமிறங்கி பலவீனப்பட்டு வரும் நிலையில், திமுக, தன்னுடைய கூட்டணியை அதே பலத்துடன் தக்க வைத்துள்ளது.. அதேசமயம், "உதயசூரியன்" சின்னத்தை ஒதுக்கி, வெற்றியை தட்டி தூக்கும் திமுகவின் "ராஜதந்திரமும்" தொடர்கிறது..!












Click it and Unblock the Notifications