திருமாவளவன் பேசிட்டு இருக்கும்போதே.. திடீர்னு வந்த "அந்த" சத்தம்.. டிஜிபி ஆபீசுக்கு ஓடிச்சென்ற விசிக
திருமாவளவன் பேசும்போது பாஜகவினர் இடையூறு செய்ததாக புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: திருமாவளவன் பேசிட்டு இருக்கும்போதே, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டனர் பாஜகவினர்.. இதுக்கு காரணம் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர்தான் என்று டிஜிபி சைலேந்திரபாபுவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் புகார் கொடுத்தனர்.
Recommended Video
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள்விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது..
அந்த வகையில், சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திருமாவளவன் வந்தார்.

பாஜக
அப்போது, விசிக, பாஜக கொடிவைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதலின்போது 2 தரப்பினரும் மாறி மாறிக் கல்வீசித் தாக்கி கொண்டனர்.. நிலைமை மோசமாக அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மோதலைக் கட்டுப்படுத்திய காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும், கலவரத்துக்குக் காரணமானவர்களின் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்கள்.

வன்னியரசு
இந்நிலையில், விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது டிஜிபி அலுவலகத்தில் வன்னியரசு புகார் கொடுத்துள்ளார்.. அந்த புகாரில் உள்ளாவது: விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தபோதே ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்தினர் என்றும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எல்.முருகன் போன்றோர் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசிச் சென்றனர்.. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியரசும், ரஜினிகாந்த்தும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜெய் ஸ்ரீராம்
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, அம்பேத்கர் பிறந்த நாளன்று கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோதுதான் அங்கிருந்த பாஜகவினர் வேண்டுமென்றே தொந்தரவு செய்துவிட்டனர்.. திடீரென ஜெய் ஸ்ரீராம் பாரத் மாதா கி ஜே என்று சொல்லி கலவரத்தில் ஈடுபட்டனர்.

திருமாவளவன்
பாஜகவை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர்.. அதனால்தான் பாஜகவினர் மீது நடவடிக்கை கேட்டுள்ளோம்.. அந்த கலவரத்திற்கு பிறகும்கூட பாஜகவினர் விடவில்லை.. மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள்..

பாஜக - விசிக
இப்படியே தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டியே, அதன் மூலம் தங்களது கட்சியை வளர்த்தெடுக்க பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள் என்றார். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவும் சரி, விசிகவும் சரி, இரண்டும் இரண்டு துருவங்கள்.. அரசியல் ரீதியாகவும் முட்டிக் கொள்வார்கள்.. சித்தாந்த ரீதியாகவும் முட்டிக் கொள்வார்கள்.. அதனால்தான் திமுகவைவிட பாஜகவுடன் அதிகம் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் கட்சி விசிக -வாகத்தான் இருக்க முடியும்..

வன்முறை
தேர்தல் காலம் முதல் எந்த ஒரு சாதாரண நிகழ்வுவரை இந்த இரு கட்சிகளுக்கும் வன்முறை, மோதல் போக்கு சகஜமாக இருந்து வரும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விவகாரமும் தலைதூக்கி வருகிறது.. பாஜக தலைவர்கள் மீது புகார் தந்துள்ள நிலையில், அதன்மீது காவல்துறை எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாவலன் அறிக்கை
இதையடுத்து, விசிகவின் மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், "ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளன்று சென்னை கோயம்பேடு அம்பேத்கர் சிலைக்கு எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் காலை 11 மணியளவில் மாலை அணிவித்து புகழாரம் சூட்டினார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், காயத்ரிரகுராம் மற்றும் கபிலன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் பாஜகவின் இரவுடிக்கும்பல் வன்முறையில் ஈடுபட்டனர்.பலரை கொடிக்கம்பத்தாலும் கற்களாலும் தாக்கினார்கள்.

திமுக அரசு
விசிகவுக்கு எதிராகவும்,திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கலவரத்தால் கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற குறுகிய நோக்கத்தோடும் வன்முறையில் ஈடுபட்டார்கள்.. அதன்காரணமாக ஏற்கனவே சிலர் மீது வழக்கு போட்டிருந்தாலும், வன்முறைக்கு காரணமான அண்ணாமலை, எல்.முருகன், காயத்ரிரகுராம் மற்றும் கபிலன் ஆகியோர் மீதும் வழக்கு போடவேண்டுமென்று விசிக சார்பில் இன்று காலை காவல் இயக்குனர் (டிஜிபி) அவர்களை சந்தித்து புகாரளித்தோம்.

ஹெல்மெட்
அத்துடன், வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் மேல்பாடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக (SI) பணியாற்றும் கார்த்திக் என்பவர் குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரத் குமார் என்கிற தலித் இளைஞனை இழிவாகப் பேசி தலைக் கவசத்தால் (ஹெல்மெட்)அடித்துள்ளார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் காவல் நிலைய வாசலிலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, தற்கொலைக்கு காரணமான காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் என்பவரை கைது செய்யவேண்டும் என்றும் வாய்மொழியாக கோரிக்கை வைக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications