கடைசி நேர ட்விஸ்ட்.. சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் செம்ம.. தாம்பரத்திற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருநெல்வேலி இடையே தொடங்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் எவ்வளவு என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.

Thirunelveli to Chennai Vande Bharat train: What is the price, speed, stops, and timings?

அதேபோல் மாநிலத்திற்கு வெளியே அதாவது சென்னை விஜயவாடா இடையே இன்னொரு சேவை தொடங்க உள்ளது. நாளை மறுநாள் சென்னை - திருநெல்வேலி இடையே புதிய சேவை தொடங்கப்பட உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி சென்னை - திருநெல்வேலி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.

இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்துவிட்டன. குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் 24ம் தேதி கண்டிப்பாக சென்னை - திருநெல்வேலிக்கு 8 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. .

சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லைக்கு வந்தே பாரத் சேவை தொடங்குவது உறுதியாகி உள்ளது. இந்த ஒதுக்கீடு காரணமாக பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டிக்கெட்: இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. 8 மணி நேரம் பயணிக்கும். ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1620 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு 3205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும்.காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும்.

Thirunelveli to Chennai Vande Bharat train: What is the price, speed, stops, and timings?

இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.

நிறுத்தங்கள்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும். மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+