இல்லாத வழக்கத்தை நடைமுறைப்படுத்த முடியாது! திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு..அமைச்சர் ரகுபதி
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அது தீபத்தூண் இல்லை என்றும், இல்லாத ஒன்றை நடைமுறைப்படுத்துவது என்ன நியாயம் என்றும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அமைச்சர் ரகுபதி கூறியதாவது:- அது தீபத்தூண் என்பது தான் என்று யாராவது ஆதாரப்பூர்வ சான்று சமர்ப்பித்தார்களா? வழக்கத்தில் இல்லாத ஒன்று நீதிமன்றம் ஏன் புகுத்த வேண்டும் என்பது தான் மக்களின் கேள்வி. அரசு அன்றே 144 தடை உத்தரவு போடப்படாமல் இருந்திருந்தால் அன்றே திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டு இருக்கும்.

சட்டத்திற்கு முரணானது
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருப்பது சட்டத்திற்கு முரணானது. தீபம் ஏற்ற அனுமதித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. இல்லாத ஒன்றை புகுத்தாதீங்க என்பதே எங்களது கோரிக்கை. இல்லாத ஒன்றை கொண்டு வருவது என்ன நியாயம்.. மலை மீது இருப்பது தீபத்தூண் கிடையாது.. என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "இதுவரை இல்லாத பழக்கத்தை, இதுவரை இல்லாத வழக்கத்தை இன்றைக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலமாக உள்ளே கொண்டு வர முயற்சிப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இது தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான ஒன்று..
தீபம் ஏற்றியதற்கான சான்றே கிடையாது
எங்களுக்கு தெரிந்தவரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான சான்று என்பது 100 ஆண்டு காலத்திற்கு கிடையாது. அது தீபத்தூண் தான் என்று அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தாரக்ளா?.. இல்லையே.. சர்வே கல் அங்கே நடப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்திலேயே அல்லது நாயக்கர் காலத்திலேயோ அல்லது காமராஜர் காலத்திலேயோ தீபத் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா? இல்லாத ஒன்றை இன்றைக்கு ஏன் நீதிமன்றம் புகுத்த வேண்டும் என்பது தான் இங்கு தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.
சுடுகாட்டில் தான் பாடியை எரிப்பாங்க
ஒரு சாறார் இன்று இதில் புகுந்து விளாயாடா பார்க்கிறார்கள். இதனாலேயே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு போகின்றோம். தமிழ்நாடு அரசு எல்லா கருத்துக்களையும் எடுத்து வைத்து வாதாடி இருக்கிறது. இந்த இடத்தில் இது தான் நடக்க வேண்டும் என்றால் இது தான் நடக்கும்.
சுடுகாடு இருக்கிறது. இங்கு தான் பாடியை எரிக்க வேண்டும் என்று கிராமத்தினர் சொல்லியிருந்தால் அங்கே தான் அந்த பாடியை எரிப்பார்கள். வேறு எந்த இடத்திலேயும் போய் எரிக்க மாட்டார்கள். அதுபோல் பழக்க வழக்கங்களை மாற்றாதீங்க.. எதற்காக இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து மக்களை குழப்ப வேண்டும் என்பது தான் எங்கள் கேள்வி..
அங்கே இருப்பது தீபத்தூணே கிடையாது
வழக்கமே இல்லாத ஒரு இடத்தில் போய் நீங்க தீபம் ஏற்ற வேண்டும் என ஏன் கேட்பதில் என்ன நியாயம். இதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது. பாஜக தமிழ்நாட்டில் எதாவது ஒரு வழியில் மதக் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சிய நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கு நிச்சயமாக தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
எல்லாரும் தங்களது பழக்க வழக்கப்படி, கலாச்சாரப்படி விரும்புகின்ற செயலை செய்வதற்கு உரிமை உண்டு. அங்கே இருப்பது தீபத்தூணே கிடையாது. நாயக்கர் காலத்திலும் ஏற்றவில்லை. வேறு எந்த காலத்திலும் தீப்பத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதனால் தான் அதற்கான ஆதாரம் கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications