Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் தீபம்.. அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு தடை - மதுரை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா உள்ளது. இந்த தர்காவின் அருகே தீபத்தூண் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத்திருநாளில் இந்த தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை எழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமாா் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

thiruparankundram-deepam-case-madurai-high-court-orders-interim-stay-against-judge-gr-swaminathan-o

இதனை விசாரித்த தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை. சட்ட ஒழுங்குப் பிரச்சனையை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம்

ஜிஆர் சுவாமிநாதன் விசாரணை

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மதுரை காவல்துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் குமார் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. மார்ச் 17 ம் தேதி இருநீதிபதிகள் கொண்ட அமர்வு ஜிஆர் சுவாமிநாதன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

இன்று மீண்டும் விசாரணை

இதற்கிடையே தான் ஜிஆர் சுவாமிநாதன் தீபத்தூணில் 5 பேர் குழு மலர்தூவி வழிபட அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து மீண்டும் நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் அமர்வில் அரசு, தர்கா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தியது.

அரசு தரப்பு வாதம்

அரசு தரப்பில் வழக்கறிஞர் வீரா கதிரவன், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது அவர்கள், ''ஏற்கனவே 2 நீதிபதிகள் அமர்வு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனால் தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டனர்.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தர்கா தரப்பு வாதம்

அதேபோல் தர்கா தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன், வாஞ்சிநாதன் ஆகியோர் வாதம் வைத்தனர். அப்போது அவர்கள், ''தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்ட தனி நீதிபதி (ஜிஆர் சுவாமிநாதன்) தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று மாதிரி தீபத்தூணில் தீபம் ஏற்றினார். தீபம் நிச்சயம் ஏற்றப்படும் என்று கூறியுள்ளார். இது சட்டவிரோதமானது.

மேலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை தனி நீதிபதி வெளிக்காட்டி உள்ளார். எனவே, தனி நீதிபதி இந்த வழக்குகளை விசாரிக்க கூடாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தர்கா தரப்பில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டனர்.

நீதிபதிகள் சொன்ன கருத்து

ராமரவிக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று வாதம் வைத்தனர். 3 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் சதீஷ் குமார், ''இந்த விவகாரத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம். இந்த விவகாரம் முக்கிய மற்றும் மிகப்பெரிய வழக்காக பார்க்கப்படுகிறது. இதனால் அவசரம் காட்டக்கூடாது. சட்டப்பிரச்சனை உள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு! தீர்ப்பில் நீதிபதிகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கலக்க கூடாது! சுகிசிவம்
திருப்பரங்குன்றம் வழக்கு! தீர்ப்பில் நீதிபதிகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை கலக்க கூடாது! சுகிசிவம்

இடைக்கால தடை

மேலும் இருநீதிபதிகள் அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்த பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தனி நீதிபதி எப்படி விசாரிக்கலாம்? என்பது பற்றி விசாரிக்கப்படும். இதுதொடர்பாக இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விரிவான விசாரணைக்காக வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+