திருவான்மியூர் ஏடிஎம்-இல் மர்ம அட்டை.. மொத்தமாக காணாமல் போகும் பணம்.. சிக்கிய வடமாநில கும்பல்
சென்னை: சென்னை, திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் ஒன்றில் கருப்பு அட்டை ஒன்றை வைத்து பொதுமக்களின் பணத்தை தொடர்ந்து திருடி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணம் வரும் பகுதியில் கருப்பு நிற அட்டை ஒன்றை ஒட்டி வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒட்டி வைத்து நூதன முறையில் பணத்தை திருடி வந்துள்ளனர். அதவாது, பொதுமக்கள் யாரேனும் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக வந்தால் அவர்களுக்குப் பணம் வராது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-இல் இருந்து சென்றவுடன், உடனடியாக உள்ளே சென்று அந்த கருப்பு நிற அட்டையை எடுத்துவிட்டு பொதுமக்களின் பணத்தை திருடிக் கொள்வதை வடமாநில கும்பலினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

திருவான்மியூர் ஏடிஎம் மட்டுமல்லாமல் இதுபோன்று பல்வேறு ஏடிஎம்களில் கருப்பு நிற அட்டையை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்தபோது இந்தச் சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்வர்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் மற்றும் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வார இறுதி நாட்களில் மட்டும் சென்னைக்கு ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு செல்வது தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வீக்கெண்டில் ஏடிஎம்-ஐ அதிக அளவில் பயன்படுத்துவார்கள் என்பதால் வார இறுதி நாள்களை குறிவைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கருப்பு அட்டை மட்டுமல்லாமல், போலி சாவி தயாரித்து அதன் மூலம் ஏடிஎம்-ஐ திறந்து பணத்தை திருடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏடிஎம் களில் பணத்தை திருடிய பின்னர் ரயில்கள் மூலமாக உத்தரப்பிரதேசத்துக்கு தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் சென்னை திருவான்மியூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பகுதியில், கருப்பு நிற அட்டையை ஒட்டிவைத்துள்ளது அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. போலீஸார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications