திருவாரூர் இடைத்தேர்தல்.. இன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது!
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
வேட்புமனுத் தாக்கல் இன்று துவங்குகிறது. இன்று முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக, அதிமுக, அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
அதனால், சுயேச்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இந்த தேர்தலில் போட்டியிட போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது போட்டியிடுகிறார்.
அவர் விரைவில் வேட்புமனுத்தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 10 ஆகும். வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14.












Click it and Unblock the Notifications