இதுதான் "நியூ நார்மல்".. உலக நாடுகளிடம் சொல்லுங்கள்.. சசி, கனிமொழி.. இந்தியா அனுப்பிய ராஜதந்திர டீம்
சென்னை: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தனது அரசியல் தலைவர்கள் குழுவை அனுப்ப உள்ளது. இன்று முதல் இந்த குழு சார்பாக தலைவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்ய உள்ளனர். முக்கியமான மெசேஜ் ஒன்றை இந்த பயணத்தில் அவர்கள் உலக நாடுகளிடம் தெரிவிக்க உள்ளனர்.

மெசேஜ் என்ன?
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் புதிய அத்தியாயத்தை அடைந்து உள்ளது. இதுதான் இனி "நியூ நார்மல்" என்று பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தான் உலக நாடுகளுக்கு இந்த டீம் தெரிவிக்க உள்ளது.
சமீபத்தில், நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது நாட்டையே உலுக்கியது. அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. அந்த தாக்குதல் என்னை தனிப்பட்ட வகையில் உலுக்கியது. என்னை கவலையில் தப்பியது. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும்.
பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.
பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது. 10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய அரசு புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, தீவிரவாதத்திற்கு எதிரான நமது போர் புதிய அத்தியாயத்தை அடைந்து உள்ளது. இதுதான் இனி "நியூ நார்மல்" என்று பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டு இருந்தார்.
உலக நாடுகளுக்கு சொல்லப் போகும் டீம்
இதைத்தான் உலக நாடுகளுக்கு இந்த டீம் தெரிவிக்க உள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தனது அரசியல் தலைவர்கள் குழுவை அனுப்ப உள்ளது. இன்று முதல் இந்த குழு சார்பாக தலைவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்ய உள்ளனர்.
இந்திய வரலாறு தெரிந்தவர்கள், நன்றாக பேச கூடிய தலைவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் பிரதமர் மோடியால் குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் ஒன்பது பேர் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்குவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு தலைமை தாங்குவார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் தரூர், கனிமொழி, சஞ்சய் ஜா மற்றும் சுப்ரியா சுலே மற்றும் ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் ரவிசங்கர் பிரசாத், பைஜயந்த் ஜெய் பாண்டா மற்றும் ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோரும் இந்த குழுக்களில் இடம்பிடித்துள்ளனர்.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியாவிற்கான குழுவிற்கு பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமை தாங்குவார். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் எட்டு பேர் கொண்ட குழுவிற்கு ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்குவார்.
இந்தோனேசியா, மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான குழுவிற்கு ஜேடியு நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா பொறுப்பேற்பார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், லைபீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கான ராஜதந்திர தொடர்புகளுக்கு ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பார்.
திமுக எம்பி கனிமொழி ஸ்பெயின், கிரீஸ், ஸ்லோவேனியா, லாட்வியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான குழுவிற்கு தலைமை தாங்குவார்.
என்ன காரணம்?
இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியாவிற்கு ஆதரவாக எந்த நாடும் நேரடியாக குரல் கொடுக்கவில்லை.
போர் நடந்து கொண்டு இருந்த போதே IMF ல் பணம் வாங்கி பாகிஸ்தான் சாதித்தது.
அப்போது இந்தியா தவிர மற்ற உலக நாடுகள் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை.
பிரிக்ஸ் கூட்டமைப்பு பெரிதாக பாகிஸ்தானை கண்டிக்கவில்லை.
QUAD நாடுகள் எதுவும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. இப்படி பலம் வாய்ந்த இந்திய கூட்டமைப்பு எதுவும் பாகிஸ்தானை நேரடியாக கண்டிக்கவில்லை.
ராஜாங்க ரீதியாக இது இந்தியாவிற்கு பின்னடைவு. இதை சரி செய்யவே.. இந்தியாவின் உறவுகளை புதுப்பிக்கவே இந்த குழு களமிறக்கப்பட்டு உள்ளது. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிற்கும் இந்தியா தனது அரசியல் தலைவர்கள் குழுவை அனுப்ப உள்ளது. இந்த போர் பற்றி கருத்துக்களை கூறவும், சர்வதேச ஆதரவை பெறவும், உண்மைகளை வெளியிடவும், ராஜதந்திர ரீதியாக இந்தியாவின் கரங்களை வலுப்படுத்தவும் இந்த குழு களமிறக்கப்பட்டு உள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications