‛‛இது ஜனநாயக தேர்தல் அல்ல.. அதையும் தாண்டி கொடூரமானது’’.. விவாதமான நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு
சென்னை: லோக்சபா தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். தற்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகானின் இன்ஸ்டாகிராம் பதிவு பேசுபொருளாகி உள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5வது கட்ட தேர்தல் என்பது மே மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இவர்களை எதிர்த்து மன்சூர் அலிகான் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடித்து அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான் தேர்தல் நாளான ஏப்ரல் 19ல் மீண்டும் வேலூர் தொகுதிக்கு சென்று பூத்களில் விசிட் செய்தார்.
இந்நிலையில் தான் மன்சூர் அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டு லோக்சபா தேர்தலை விமர்சனம் செய்துள்ளார். அதாவது மலைப்பிரதேசத்தில் மன்சூர் அலிகான் நிற்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவுடன் நடிகர் கமல்ஹாசன் நடித்த குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் என்ற பாடலில் வரும், ‛‛உண்டான காயம் எங்கும் தன்னாலே மாறிப்போகும்.. மாயம் என்ன பொன்மானே.. பொன்மானே.. என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது'' என்ற வரிகளை பின்னணி இசையாக சேர்த்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் மன்சூர் அலிகான், ‛‛மனிதன் உணர்ந்து கொள்வதற்கு இது உண்மையான ஜனநாயக தேர்தல் அல்ல; அதையும் தாண்டி., கொடூரமானது....!!'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களின் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மன்சூர் அலிகானின் இந்த பதிவு தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications