Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தோராய பட்டா வைத்திருப்போருக்கு இ பட்டா.. கிராம நத்தம் நிலம் குறித்து அரசுக்கு பெயிரா புதிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நத்தம் நிலங்களில் இருக்கின்ற சர்க்கார் காலி நத்தம் வகைபாடுகள் மற்றும் இன்று வரை நத்தம் சர்வே நடைபெறாத கிராமங்கள் என அனைத்தையும் கூடுதல் கவனத்தில்கொண்டு, அவைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு தூய பட்டா வழங்கப்படுமென சிறப்புமிகு அறிவிப்பினை வரவேற்றும், பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

Thoraya patta Gram Natham Land e patta

அந்த கடிதத்தில், "தமிழகம் முழுவதும் நத்தம் நிலவரித் திட்ட தோராய பட்டா வைத்திருப்பவர்களுக்கு விரைவில் இ-பட்டா வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் சிறப்புமிகு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இத்தருணத்தில் தூய பட்டா மற்றும் தோராய பட்டா குறித்த தெளிவான விவரங்கள் மற்றும் அரசால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் குறித்தும் பதிவிடுவது சிறப்பானதாக இருக்கும்.

தோராய பட்டா: தூய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டாவாகும். ஆனால் தோராய பட்டா என்பது துல்லியமான தகவல்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் பட்டா அல்ல.

பெயருக்கேற்ப ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஏக்கர் கணக்கிலோ அளவீடு செய்து நத்தம் புறம்போக்கு நிலங்களாக அரசாங்கத்தால் வகைப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வகையான நத்தம் நிலங்களில் அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கும் நிலத்தினை அளவீடு செய்து அரசாங்கத்தால் வழங்கப்படுவதைதான் தோராய பட்டா என்று குறிப்பிடுகிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சி: மேலும் மேற்கூறிய வகையில் வகைப்பாடு செய்யப்பட்டிருக்கும் நத்தம் புறம்போக்கு நிலங்களில் ஏரி, குளம், வீடு, தெரு என வகைப்படுத்தி அதற்கான வரைபடம் மற்றும் புதிய சர்வே எண்களை கொடுத்து நிலவரித் திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். இதன் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தி அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படுவதின் மூலம் அந்த நிலங்கள் நிலவரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது. இந்நடைமுறையானது பிரிட்டிஷ் ஆட்சி காலம் தொட்டே இருந்து வருகிறது.

மேலும் தோராய பட்டா என்பது நிரந்தர பட்டா கிடையாது. இதில் ஏதாவது தவறுகள் மற்றும் பிழைகள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றினை குறித்து பொதுமக்கள் 45 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிவிக்க வேண்டும் என்ற தகவலின் அடிப்படையில் தோராய பட்டா வழங்கப்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் தோராய பட்டாக்கள் வழங்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் பல காலமாக தூய பட்டா வழங்குவதற்கான அடுத்த கட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.

நத்தம் நிலங்கள்: இந்நிலையில் நத்தம் நிலவரி சர்வேயை முழுமையாக நடத்தி முடிக்காமல் அவசரக் கதியில் இத்திட்டத்தினை 1970 ஆம் ஆண்டு முழுமை பெறாமல் இறுதி வடிவம் கொடுத்துவிட்டனர். அதன் காரணமாகதான் இதுநாள் வரை நத்தம் நிலங்களை பொறுத்தவரை பல பகுதிகளில் ஒரு தரப்பினர் தோராய பட்டா வைத்திருக்கிறார்கள் வேறு சிலர் தூய பட்டா வைத்திருக்கிறார்கள் ஒரு சிலர் எங்களுடைய நிலம் இன்னும் நத்தம் புறம்போக்காகவே இருக்கிறது என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி நத்தம் நிலங்கள் தொடர்பாக முறையான தகவல்கள் இல்லாத காரணத்தினால் மக்கள் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி அச்சத்துடன் இருந்து வந்தார்கள்.
அதேபோல, தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட நத்தம் நிலங்களில் சர்வே எண்களின் அடிப்படையில் நத்தம் நிலவரித் திட்டமானது நிறைவு பெறாத அல்லது முழுமையாக சர்வே நடைபெறாத பகுதிகள் உதாரணத்திற்கு சென்னை, சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், பீர்க்கங்கரணை போன்ற பகுதிகளில் எல்லாம் நத்தம் நிலங்கள் முழுமையாக சர்வே செய்யப்படவில்லை. அது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள தாலுகாக்களில் ஓரிரு கிராமங்களில் நத்தம் சர்வேயானது இன்று வரை நடைபெறாமல் உள்ளது.

குழப்பங்கள்: இப்படி பல வருடங்களாக பொதுமக்கள் மத்தியில் நீண்டு வந்த குழப்பங்கள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், நத்தம் நிலங்களின் பேரில் வழங்கப்பட்ட தோராய பட்டாக்கள் அனைத்தும் தூய பட்டாவாக மாற்றப்படும் என தமிழக சட்டசபையில் வெளியான இந்த அறிவிப்பானது தோராய பட்டா வைத்திருப்பவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தூய பட்டாவானது தோராய பட்டா உடமையாளர்களுக்கு ஒரு சரியான சட்ட அந்தஸ்தை கொடுக்கும் இ-பட்டா ஆவணமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அறிவிப்பினை சட்டபேரவையில் அறிவித்த தமிழக அரசின் செயலினை வரவேற்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

கிராமங்கள்: மேலும் நத்தம் நிலங்களில் இருக்கின்ற சர்க்கார் காலி நத்தம் வகைபாடுகள் மற்றும் இன்று வரை நத்தம் சர்வே நடைபெறாத கிராமங்கள் என அனைத்தையும் தமிழ்நாடு அரசானது தங்களின் கூடுதல் கவனத்தில்கொண்டு, மேற்கூறியவைகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் கனிவுடன் பரிசீலித்து அதற்குரிய நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+