"நைட் பார்ட்டி".. போதையில் அரைகுறை டிரஸ்ஸில்.. அதிர வைத்த 24 வயது பெண்.. உறைந்த சென்னை போலீஸ்
"நைட் பார்ட்டி".. போதையில் அரைகுறை டிரஸ்ஸில்.. அதிர வைத்த 24 வயது பெண்.. உறைந்த சென்னை போலீஸ்
சென்னை: இரவு நேர மதுவிருந்தில் கலந்து கொண்ட அனைவருமே 20 வயதுக்கு குறைவான ஆண்-பெண்கள்தானாம்.. சென்னையில் இப்படி ஒரு அதிர்ச்சி நடந்துள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், நைட் பார்ட்டி அதாவது இரவு மது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அனுமதி இல்லாமல் அந்த டி.ஜே. நிகழ்ச்சியை நடத்தியதாக கூறப்படுகிறது.
செல்போன் செயலி மூலம் பதிவு செய்து 900க்கும் மேற்பட்டவர்கள் இந்த பார்ட்டியில் பங்கேற்றுள்ளனர்..

ஆட்டம் - பாட்டம்
மேலும், பிரேசிலை சேர்ந்த ஃபேமஸ் டான்ஸரான, மந்த்ரா கோரா என்பவரின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது... இந்த பார்ட்டியில் மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் பங்கேற்றுள்ளார்.. அவருக்கு 23 வயதாகிறது.. தன்னுடைய நண்பர்களோடு இந்த பார்ட்டிக்கு வந்திருந்தார். மது போதையில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிரவீன் திடீரென மயங்கி கிழே விழுந்துவிட்டார்.. இதனால் பதறிப்போன நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்..

உயிரிழப்பு
தீவிர சிகிச்சை தரப்பட்டும் பிரவீனை காப்பாற்ற முடியவில்லை.. அளவுக்கு அதிகமான போதை பொருளை சாப்பிட்டதால், பிரவீன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. சென்னையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். இதே வழக்கு தொடர்பாகத்தான், ஏற்கனவே நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்..

நைட் பார்ட்டி
அப்படி இருந்தும் இந்த வணிக வளாகம் அருகே, இளைஞர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது... எனவே, சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.. அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இளைஞரையும் பிடித்து விசாரித்தனர்.. ஆனால், அவர் சரியாக பதில் சொல்லவில்லை.. இதனால், அவரை போலீசார் சோதனை செய்தனர்.. அப்போது போதை மாத்திரை அவரிடம் இருந்ததை கண்டுபிடித்தனர்..

இளம்பெண் கைது
பிறகுதான் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.. அதில் அயனாவரத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற 28 வயது நபரின் பெயரை சொன்னார்.. அவரை பிடித்து விசாரித்தால், சாகுல் ஹமீத் என்ற 21 வயது இளைஞர்தான் காரணம் என்று சொன்னார்.. அவரையும் பிடித்து விசாரித்தால், இதற்கெல்லாம் முக்கிய காரணமே கோடம்பாக்கத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் டோக்கஸ் என்பவர்தான் என்றார்.. இவர்தான், போதை மாத்திரை, ஸ்டாம்புகள் விற்பனை செய்து வந்தவராம்.. வாட்ஸ் அப் மூலம் போதை பொருட்களுக்கான ஆர்டர் எடுத்து கொள்வாராம்..

ஸ்டாம்புகள்
பிறகு நேரில் வரவழைத்து அந்த போதை பொருளை விற்பனை செய்வாராம்.. இதையெல்லாம் கேட்டு போலீசார் மிரண்டு விட்டனர்.. பிடிபட்ட 3 பேரிடமிருந்தும் பல லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள், ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட அந்த, மது போதை விருந்தில் எல்லாருமே 20 வயதுக்கும் குறைவான ஆண், பெண்கள்தான் கலந்து கொண்டனராம்..

டிஜே பார்ட்டி
இப்போது கைதாகி உள்ள 3 பேரில் ஒருவரான ஸ்ரீகாந்த் என்பவர், ஹைகோர்ட் பிரபல வக்கீல் ஒருவரின் உதவியாளராம்.. டொக்காஸ் என்ற மாணவி, அடையார் பெட்டிஷன் காலேஜில் எம் ஏ ஆங்கிலம் 2ம் வருடம் படித்து கொண்டு இருக்கிறாராம்.. எங்கெல்லாம் மதுவிருந்து நடக்குமோ, அங்கெல்லாம் இந்த 3 பேரும் வாட்ஸ் அப் க்ரூப் அமைத்து, சம்பந்தப்பட்ட மதுபோதை மற்றும் டிஜே பார்ட்டிகளுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.. இதையெல்லாம் கேட்டு போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர்.. இன்னும் விசாரணை நடக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications