கிளம்பறீங்களா ஊருக்கு.. தமிழக ரயில் பயணிகளுக்கு வெளியான இனிப்பு செய்தி.. கலக்கும் தென்னக ரயில்வே
சென்னை: 3 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்றை பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவித்தும் உள்ளது.
தெற்கு ரயில்வே நிர்வாகம், தமிழ்நாடு, கேரளாவில் இருந்து நீண்டதூரத்திற்கு இயங்கும் 7 முக்கிய ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.

ரயில் பெட்டிகள்: ரயில்வே பெட்டிகளில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாற்றங்கள் இந்த மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கு பயணிகள் சார்பிலும், ரயில்வே ஊழியர்கள் சார்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின.. இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் ஏசி பெட்டிகளில் பயணிக்க மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி வருகிறது. அப்படியானால் மூன்றடுக்கு ஏசி பெட்டியில்தான் பயணிக்க வேண்டுமா? இது சாதாரண கட்டணத்தில் இருந்து 3 மடங்கு அதிகமாகிறதே? என்ற கலக்கமும் நடுத்தரவர்க்க பயணிகளை சூழ்ந்து கொண்டுள்ளது.
கூடுதல் ரயில்கள்: அதேபோல, பயணிகளின் கோரிக்கைக்கு இணங்க தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 9 ரயில்களின் நிறுத்தங்களை அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது.. அதன்படி பாண்டியன் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 முக்கிய ரயில்கள் சோதனையின் அடிப்படையில் கூடுதல் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.. அந்த அறிக்கையில், "நெல்லை - பாலக்காடு - நெல்லை (வண்டி எண்.16791/16792) பாலருவி எக்ஸ்பிரஸ் ரய்ல குண்டாரா, கீழக்கடையம் ரயில் நிலையங்களில் ஜூலை 18 முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை எழும்பூர் - மதுரை (வண்டி எண்.12637) பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 18 ஆம் தேதி முதல் மணப்பாறை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவூர்சத்திரம்: சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்.22661) ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை - பாலக்காடு (வண்டி எண்.16791) பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்ச்சத்திரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் - பனாரஸ் (வண்டி எண்.22535) வாராந்திர ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஜூலை 19 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - நெல்லை (வண்டி எண்.12631) நெல்லை எக்ஸ்பிரஸ் சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்றும் கோவை - ராமேஸ்வரம் (வண்டி.எண்.16618) வாராந்திர ரயில் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிவிப்பு: மேலும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (வண்டி எண்.12693) முத்துநகர் எக்ஸ்பிரஸ் திருமங்கலம் ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்றும் சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர் (வண்டி எண்.16101/16102) கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ஜூலை 18 ஆம் தேதி முதல்நின்று செல்லும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications