அண்ணாமலை முதல்வரா?.. ரஜினிக்கு தெரியுமா.. 'சோ' வாக மாற்றிவிடாது.. குருமூர்த்தியை சாடிய எஸ்.வி சேகர்
சென்னை: சோ உடன் யாரையும் ஒப்பிடமுடியாது! சோ வின் நாற்காலியில் அமர்ந்திருப்பதே ஒருவரை சோ வாக மாற்றிவிடாது என்று எஸ். வி. சேகர் கூறியுள்ளார். அண்ணாமலை பற்றி துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது பற்றியும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி. சேகர்.
துக்ளக் இதழின் 54ஆம் ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசும் போது, திமுகவை எதிர்த்து தமிழ்நாட்டில் கூட்டணி அமையாததற்கு முழு பொறுப்பு எடப்பாடி பழனிசாமிதான் ஏற்க வேண்டும். பாஜகவுக்குதான் ஓட்டுப்போடவேண்டும் என நாம் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் நூறுபேரிடம் பேச வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்வது மட்டும்தான் திமுகவை எதிர்ப்பதற்கு வழி, அதிமுக கட்சியானது திமுக எதிர்ப்பை கைவிட்டுவிட்டது. ஏதோ ஒரு சின்ன கட்சியாக நடத்திக் கொண்டிருந்தால் போதும் என எடப்பாடி நினைக்கிறார்.

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக வர வேண்டும் என நினைத்தார். அப்போது அவர் என்னிடம் 'நான் முதலமைச்சராக வரமாட்டேன்' என்று கூறினார்.'நீங்களே முதலமைச்சராக வரவில்லை என்றால் வேறு யார் வருவார்கள்?' என நான் கேட்டேன் அப்போதுதான் அண்ணாமலை என்று ஒருவர் இருப்பதை பற்றி கூறினார்.
அண்ணாமலை குறித்து நான் பேப்பரில் படித்து கேள்விபட்டு இருந்தேன். பாஜக சித்தாந்தத்தால் அண்ணாமலை ஈர்க்கப்பட்டுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் அண்ணமலைக்கு உள்ளது. அரசியல் என்பது சவால் நிறைந்தது. வாழ்கையில் நிம்மதியாக இருந்த மனிதர், இன்று அதை ஓரம்போட்டுவிட்டு அரசியலில் உள்ளார். இன்று அண்ணாமலை பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என பேசி இருந்தார்.

அண்ணாமலை பற்றி குருமூர்த்தி பேசியது குறித்து நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் தனது 'எக்ஸ்' சமூகவலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர்" என தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் ரஜினிக்கு கூட தெரியாது. ஏப்ரல் 1ம்தேதி சொல்லணும்னு நினைச்சேன். அன்னிக்கு ஹால் கிடைக்கலை அதான் இன்னிக்கு சொல்றேன் என்றும் பதிவிட்டுள்ளார் எஸ்.வி சேகர்.
சோ உடன் யாரையும் ஒப்பிடமுடியாது! சோ வின் நாற்காலியில் அமர்ந்திருப்பதே ஒருவரை சோ வாக மாற்றிவிடாது" என தெரிவித்துள்ளார் எஸ்.வி. சேகர்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications