வேற லெவல் ஆகப்போகுது மாதவரம்.. இதோ வருது “டெக் சிட்டி”.. மாஸ்டர் பிளானுக்கு டெண்டர் கோரியது டிட்கோ!
சென்னை: தமிழ்நாடு டெக் சிட்டி சென்னை மாதவரத்தில் அமைய உள்ளது. மாதவரத்தில் டெக் சிட்டி திட்டத்துக்காக 150 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. 150 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அலுவலகம், குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், உலகளாவிய திறன் மையங்கள், நிதி நுட்ப நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகிய துறைகளில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் பகுதிகளில் டெக் சிட்டி எனப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை தமிழக அரசு தொடங்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்தவகையில், சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நகரத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது. சென்னை புறநகரான மாதவரத்தில் இதற்காக 150 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாதவரத்தில் தொழில்நுட்ப நகரம் அமைப்பதற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி உள்ளது. இந்த டெக் நகரத்தில் அலுவலக வசதி, குடியிருப்பு வசதி, வணிக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அருகருகே அமைந்திருக்கும்.
குறிப்பாக பள்ளிகள், மருத்துவமனைகள், சுற்றுச்சூழல் பூங்கா, விளையாட்டு வளாகம், சாலை மற்றும் மெட்ரோ இணைப்பு சேவைகள், தடையில்லா மின்சாரம் மற்றும் தண்ணீர், குழாய் வழியாக சமையல் எரிவாயு வசதி உள்ளிட்ட வசதிகள் இந்த நகரத்தில் இருக்கும். அதேபோல் ஷாப்பிங் மால்கள், சில்லறை விற்பனை கடைகள், ஹோட்டல்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.
மேலும், அதிநவீன வசதிகள் கொண்ட டேட்டா செண்டரும் இங்கு அமைய உள்ளது. இந்த மையத்தில் அதிநவீன கணினி வசதி, தரவுகளை சேமிக்கும் வசதி, பல்நிலை தரவு பாதுகாப்பு, பேரிடர் காலத்தில் தரவுகளை பாதுகாத்தல், அதிவேக இணைய வசதி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை உள்ளடக்கி இருக்கும். மேலும், இந்த நகரத்தில் உலகத் தரத்திலான ஒரு மாநாட்டு மையமும் அமைக்கப்பட உள்ளது.
இந்த டெக் சிட்டி, உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறை, பின்டெக், டீப்டெக் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்காக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்க அரசு திட்டமிட்டுள்ளது.
-
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி வெயிட்டிங்! இவர்களிடம் தமிழ்நாடு சிக்கினால் என்ன ஆகும்? ஸ்டாலின் அட்டாக் -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்!












Click it and Unblock the Notifications