எலான் மஸ்க்குடன் கூட்டு; ஆகஸ்ட்டில் 5ஜி சேவை? புதிதாக குவிந்த 1 கோடி பேர்! BSNL சூப்பர் ஃபாஸ்ட்
சென்னை: மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். விரைவில் எலான் மஸ்க்குடன் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதத்திற்கு 5ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ஜியோ விலை ஏற்றத்திற்குப் பிறகு பலரும் பி.எஸ்.என்.எல் பக்கம் தாவி வருகிறார்கள். சொல்லப் போனால் சமூக வலைத்தளங்களில் அரசு நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்ற பிரச்சாரமே முன்னெடுக்கப்பட்டது. ஹேஷ் டேக் போட்டு செய்தியை வைரல் செய்தனர் வாடிக்கையாளர்கள்.

இந்நிலையில்தான் பி.எஸ்.என்.எல் தனது 4ஜி சேவையை தொடங்கி உள்ளது. அதன் அடுத்த கட்டமாகக் கூடவே 5ஜி சேவையையும் கொடுக்க உள்ளது. வழக்கமாக 4ஜி அறிமுகமானால் அதை மாற்றி 5ஜி சேவையைத் தர பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குக் கிட்டத்தட்ட 9 வருடங்கள் ஆகும். அப்போதுதான் மாற்றம் வரும். அரசு நிறுவனம் என்றால் ஆமை வேகம் என்ற பெயரை எடுத்துவிட்டது பி.எஸ்.என்.எல். இப்போது அப்படி அல்ல. அடுத்த ஆறே மாதத்தில் இந்த அரசு நிறுவனத்தால் 5ஜி சேவையை வழங்க முடியும். அதற்காக ஒப்பந்தத்தை டிசிஎஸ் உடன் இணைத்து பி.எஸ்.என்.எல் போட்டுள்ளது.
இதற்காக கோபுரங்களை மாற்றாமல் அப்படியே சில கருவிகளை மட்டும் மாற்றி 5ஜி சேவையை தர முடியும் என்கிறார் பி.எஸ்.என்.எல். முன்னாள் ஊழியர் மதிவாணன். மேலும் அவர் அரசு வேகம் எடுத்துள்ளது குறித்து சிகே மதிவாணன், “ஜியோ உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதைக் கட்டண உயர்வு என்று சொல்லக்கூடாது. இது ஒரு கட்டணக் கொள்ளை என்றே நான் சொல்வேன். கடந்த 2 ஆண்டுகள் முன்பே விலையை ஏற்றி இருக்கவேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால்தான் இப்போது விலையை ஏற்றியுள்ளோம் என்று அந்த நிறுவனங்கள் காரணம் சொல்கின்றன. ஆனால்,மத்திய அரசின் ட்ராய் 'அனுமதி பெற்ற பிறகே விலையேற்றம் நடந்துள்ளது. உள்கட்டமைப்பை நவீனப்படுத்த இந்த விலையேற்றம் தேவையாக உள்ளது. ஆகவே சரிதான்’ என ஒரு அறிக்கை தந்துள்ளது.
ஒரு தனியார் நிறுவனம் 20% விலையேற்றம் செய்வதை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசு நிறுவனமான ட்ராய்க்கு ஏன் வந்தது என்பதே புரியவில்லை. உட்கட்டமைப்பை நவீனப்படுத்த இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது என்றால், பி.எஸ்.என்.எல் கூட 2ஜியில் இருந்து 3ஜி வந்தது. பிறகு 4ஜி, 5ஜி என படிப்படியாகச் சேவையை நவீனப்படுத்தி உள்ளது. இது ஏன் விலை ஏற்றவில்லை? இன்றைக்கும் பி.எஸ்.என்.எல் 107 ரூபாய்க்கு பேக்கேஜ் திட்டத்தை வைத்துள்ளது. இதே சேவைக்கு தனியார் நிறுவனம் இரண்டு மடங்கு கட்டண வசூல் செய்கிறதே?
5ஜி சேவை தரப்போகிறோம் என்று சொல்லி அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்குமான கட்டண உயர்வை அதிகரித்துள்ளது தனியார் நிறுவனம். அனைவருக்குமா 5ஜி சேவை தரப்போகிறார்கள்? இல்லை. ஒரு குறிப்பிட்ட சேவையாளர்களுக்கு மட்டும்தான் 5ஜி வசதியை தரப்போகிறார்கள். ஆனால், 48 கோடி பேருக்கும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இல்லாத பட்டன் போன் சேவைக்கும் கட்டண உயர்வு செய்திருப்பது நியாயமே இல்லையே?
டெலிகாம் துறையில் ஒரு காலத்தில் 23 நிறுவனங்கள் இருந்தன. ரியலன்ஸ் ஜியோ வந்த பிறகு வியாபார தர்மமே இல்லாமல் இண்டர்நெட் சேவையை இலவசமாக தருகிறேன் என்று சொன்னார்கள். வாய்ஸ் கால் வாழ்நாள் முழுவதும் இலவசம் என்றார்கள். அதை எதிர்த்து போட்டி நிறுவனங்கள் புகார் அளித்தன. அதை யாரும் பொருட்படுத்தவே இல்லையே? அதற்குப் பிறகு கட்டணத்தை 2 ஆண்டுகள் கழித்து ஜியோ உயர்த்திவிட்டதே? வாய்ஸ் கால் இலவசம் என்றார்களே அதை இப்போது ஏன் தரவில்லை? அதை யாராவது கேள்வி கேட்டார்களா? 2 ஆண்டுகளில் 48 கோடி வாடிக்கையாளர்களை எப்படி இழுத்தார்கள்? இப்படி பொய்யான வாக்குறுதியை அளித்துதானே?
இன்றைக்கு 4 போட்டியாளர்கள்தான் டெலிகாம் துறையில் இருக்கிறார்கள். மற்ற அனைவரும் காணாமல் போய்விட்டனர். இது எப்படி நடந்தது? அப்படித்தான் பி.எஸ்.என்.எல் வீழ்த்தப்பட்டது. 2000இல் அரசு டெலிகாமை கார்பரேட் ஆக மாற்றியது. Bharat Sanchar Nigam Limited என மாற்றப்பட்டது. 2008 வரை 10 ஆயிரம் கோடி லாபத்தில்தான் அரசு நிறுவனம் இயங்கி வந்தது. 2009இல் தான் முதல் நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்தது.
அதற்குக் காரணம் எங்களுக்கு முன்பே தனியார் நிறுவனங்கள் மொபைல் போன் சேவையை தொடங்கிவிட்டன. நாங்கள் டெலிபோன் சேவையிலிருந்து 7 ஆண்டுகள் பின் தங்கி மொபைல் சேவையை தொடங்கினோம். அதற்கு முன்பே வாடிக்கையாளர்களைப் பலரும் ஈர்த்துவிட்டார்கள். அதை மனதில் வைத்து இன்கம்மிங் கால் ஃபிரீ என்றும் ரோமிங் கால் இலவசம் என்று அறிவித்தோம். அதனால் பி.எஸ்.என்.எல் பக்கம் மக்கள் தாவினர். அடுத்த ஆண்டே இரண்டாவது இடத்தை பிடித்தோம். முதலிடம் ஏர்டெல் இருந்தது. அதைத் தொடரவிடாமல் சதி செய்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கினார்கள். அதற்கு அரசியல் சதிதான் காரணம். ஆகவே, நாங்கள் இயங்க முடியாமல் போனது.
இப்போது ஜியோ விலை ஏற்றத்திற்குப் பிறகு நாங்கள் அழைக்கவில்லை. தன் எழுச்சியாக மக்கள் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பி உள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக இந்தியா முழுவதும் 2 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல் பக்கம் வருகிறார்கள். கேரளாவில் மட்டும் புதியதாக 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். சுமார் 1 கோடி புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். முன்பே டாடாவுடன் பி.எஸ்.என்.எல் கைகோர்த்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக எலான் மாஸ்க் உடன் கைகோர்க்க உள்ளது பி.எஸ்.என்.எல். ஆகஸ்ட் மாதத்திற்குள் சென்னை முழுவதும் 4ஜி சேவையைக் கொடுக்க தயாராகி வருகிறோம். ஆகஸ்ட் 15க்குள் சென்னையில் ஒரு சில பகுதிகளில் முதற்கட்டமாக 5ஜி சேவையை பி.எஸ்.என்.எல் வழங்க உள்ளது" என்கிறார்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications