சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிக்டாக் ஐ நீக்கிட்டாங்க... இனி கூகுள் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஆப்ல தேடினாலும் கிடைக்காது

கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. சீனாவின் செயலிகளான டிக் டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், க்வாய், ஹெலோ உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதை இந்

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியா சீனா இடையேயான எல்லைப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. 59 சீனா செயலிகளை உடனடியாக தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    59 Chinese appsக்கு தடை..மத்திய அரசு அதிரடி

    இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினை எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் இணையத்தில் சீனாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சனை செய்யப்பட்டு வருகிறது.

    யாருடைய குடும்பத்தையும் நான் கெடுக்கல.. என்னை யாரும் ஏமாத்தல.. நான் ஏமாறல.. விளாசி தள்ளிய வனிதா!

    டிக்டாக்

    டிக்டாக்

    சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் மூலம் டிவிட்டரில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் ஆண்ட்ராய்டு செயலிகளை, ஆன்லைன் சாதனங்களை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். சீன செயலிகளுக்கு எதிராக தீவிரமாக இந்த பிரச்சாரம் நடந்தது. இந்த நிலையில் டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து திங்கட்கிழமை இரவு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    59 செயலிகளுக்கு தடை

    59 செயலிகளுக்கு தடை

    தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டதாக கூறி இந்த செயலிகள் மீது தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என்ற இரண்டு தளங்களில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேடினாலும் கிடைக்காது

    தேடினாலும் கிடைக்காது

    மத்திய தகவல் தொடர்பு துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டேட்டா திருட்டு தொடங்கி பல்வேறு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இனி ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோர்களில் தேடினாலும் கிடைக்காது.

    டிக்டாக் குடும்பத்தினர் வருத்தம்

    டிக்டாக் குடும்பத்தினர் வருத்தம்

    இந்தியாவில் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களும், பார்ப்பவர்களும் பலகோடி பேர் உள்ளனர். மத்திய அரசின் தடை உத்தரவால் பலருக்கும் வருத்தம் இருந்தாலும் தேசத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களின் தடைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    English summary
    The government of India on Monday announced the ban of 59 Chinese apps in the country. A day later one of the most popular short video applications TikTok has been taken down from Apple App store and also Google Play store.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X