காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது... ரஜினிகாந்த் கடும் கண்டனம்
சென்னை: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போதும்..போதும். காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
இதே போல், நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டோர் ஜம்மு - காஷ்மீரில் நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், புல்வாமா தாக்குதல் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications