18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. கடந்து வந்த நீண்ட பாதை!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை மிக நீண்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும்.. ஹைகோர்ட் 3வது நீதிபதி அதிரடி தீர்ப்பு- வீடியோ
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு கடந்து வந்த பாதை மிக நீண்டது.
கடந்த ஒரு வருடமாக இந்த வழக்குதான் தமிழகத்தின் தலைப்பு செய்தி. இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

நீதிபதி சத்யநாராயணன் இன்று இந்த தீர்ப்பை வழங்க உள்ளார். இந்த வழக்கு கடந்து வந்த பாதை இதுதான்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா 5-12-2016 அன்று இயற்கை எய்தினார்.
- 2017 பிப்ரவரி 5ம் தேதி தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.
- 2017 பிப்ரவரி 6ம் தேதி அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு.
- 2017 பிப்ரவரி 7ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் தியானம் இருந்தார். தர்மயுத்தம் தொடங்கியது.
- 2017 பிப்ரவரி 14ல் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. சசிகலாவிற்கு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- 2017ம் பிப்ரவரி 16ல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
- அதேநாள் டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
- 2017ம் ஏப்ரல் 25ல் இரட்டை இலை சின்ன வழக்கில், லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் கைது.
- 2017 ஆகஸ்ட் 21ம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்தது.
- 2017 செப்டம்பர் 7ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை அவரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் சென்று முறையிட்டனர்.
- 2017 ஆகஸ்ட் 22 ம் தேதியன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் புதுச்சேரி, கூர்க் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
- 2017 செப்டம்பர் 18ம் அன்று தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
- 2017 செப்டம்பர் 20 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், மறுஉத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்றும், தீர்ப்பு வழங்கப்பட்டது.
- 2018 ஜனவரி 23ம் தேதி வரை இந்த வழக்கில் விசாரணை நடந்தது.
- 2018 ஜூன் 14ம் தேதி தீர்ப்பு வெளியானது.
- தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஆனால் இருவரும் வேறு வேறு தீர்ப்பு வழங்கினார்கள்.
- இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு மாற்றப்பட்டது.
- 2018 ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து வாதமும் முடிவடைந்தது.
- இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
More From
-
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?












Click it and Unblock the Notifications