திருவண்ணாமலையில் சுமதி.. இப்ப சென்னை SI கலைச்செல்வி.. கோர்ட்டில் நிறுத்தியதுமே நீதிபதி தந்த தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் லஞ்ச விவகாரங்களில் அரசு ஊழியர்கள் வருகிறார்கள்.. இதில் பெண்களும் கைதாகி கொண்டிருக்கும் சூழலில், காவல்துறை பெண் அதிகாரி ஒருவருக்கு, சென்னை ஹைகோர்ட் சிறைத்தண்டனையை விதித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசு துறைகளிலேயே, அளவுக்கு அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு துறை விளங்குகிறது.. எனவேதான் இந்த துறையில் லஞ்ச புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள்.

chennai

பட்டா மாறுதல்: வேலூர் விஏஓ 10 நாட்களுக்கு முன்பு கைதானார்.. சரஸ்வதி என்பவர் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என்று வேலூரில் விண்ணப்பித்திருந்த நிலையில், சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த விஏஓ ஷர்மிளா (59) ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஷர்மிளாவிடம், சரஸ்வதி தந்ததுமே, விஏஓ ஷர்மிளாக சுற்றிவளைக்கப்பட்டு கைதானார். இத்தனைக்கும் இன்னும் சில நாளில் ஷர்மிளா, ஓய்வு பெறவிருந்தவராம்.

நேற்றுமுன்தினம், தென்காசி விஏஓ பத்மாவதி வசமாக சிக்கியிருக்கிறார்.. பட்டா மாறுதல் செய்ய 4,500 ரூபாய் தர வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களிடம் கறாராக பேசியிருக்கிறார்.. இறுதியில், பத்மாவதியும் , இந்த புகாரில் கைதாகிவிட்டார்.

சிறைதண்டனை: இந்நிலையில், பெண் போலீஸ் அதிகாரியும் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகியதுடன், சிறைதண்டனையும் அவருக்கு தரப்பட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

சென்னை வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜன். இவர் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.. கட்டுமான பணிக்காக திருவான்மியூரை சேர்ந்த அழகேசன் என்பவரிடம் இருந்து, செல்வராஜன் மணல் வாங்கியுள்ளார். இதற்கான பணத்தை தருவதில், இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது..

புகார் மனு: எனவே, கடந்த 2013ல் செல்வராஜன் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்வராஜன், வேளச்சேரி போலீசில் புகார் செய்தார். அப்போதைய வேளச்சேரி எஸ்.ஐ. கலைச்செல்வி, இந்த புகாரை விசாரித்துள்ளார்..

பிறகு அழகேசனிடம், " இதுபோல தகராறில் ஈடுபடக் கூடாது, ஏதேனும் பிரச்சனை என்றால், நீதிமன்றம் வாயிலாக தீர்வு காண வேண்டும்" என்று அறிவுறுத்தி, புகாரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.. அதன்படியே, இரு தரப்பினரும் அமைதியாகிவிட்டார்கள். ஆனால், அதற்கு பிறகு செல்வராஜை தொடர்பு கொண்ட கலைச்செல்வி, பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்ததற்காக, 2,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மீண்டும் புகார்: இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜன், இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச பணத்தை பெற்ற போது எஸ்.ஐ., கலைச்செல்வியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்பு நடந்தது.

போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.. இறுதியில் இந்த வழக்கில், எஸ்.ஐ., கலைச்செல்வி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறிய நீதிபதி, அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

புழல் சிறை: அன்று வேளச்சேரி எஸ்.ஐ.யாக இருந்த கலைச்செல்வி, இப்போது பட்டினப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருகிறார்.. 5 வருட ஜெயில் என்று தீர்ப்பு நேற்று வெளியானதுமே, கலைச்செல்வியை கைது செய்த போலீசார், புழல் ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.. 2000 ரூபாய் பணத்துக்காக, அரசு வேலையை துறந்து, 5 வருட சிறைத்தண்டனைக்கும் ஆளாகியிருக்கிறார் பெண் அதிகா

திருவண்ணாமலை: கடந்த 10 நாட்களுக்கு முன்பு,திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில், சுமதி என்ற பெண் அதிகாரி லஞ்ச புகாரில் சிக்கியிருந்தார்... புதிய ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு விண்ணப்பதாரர் கேட்டதற்கு சுமதி, ரூ.3 ஆயிரம் தந்தால்தான் ஒப்புதல் வழங்குவேன் என்று கறாராக பேசியிருக்கிறார்.

கடைசியில் இவரை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் அருள்குமார் புகார் தரவும், இறுதியில் கையும் களவுமாக சிக்கினார் சுமதி.. வரும் 31ம் தேதியுடன் சுமதி பணிநிறைவு பெறவிருந்தாராம்.. ஆனால், அதற்குள் இந்த புகாரில் சிக்கி அசிங்கப்பட்டார். நாளுக்கு நாள் பெண் அதிகாரிகள் கைதாகி வரும்நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், பெண் எஸ்.ஐ.க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+