“15 வருட அனுபவத்தில் மின்வெட்டே இல்லாத ஆட்சி”- ஸ்டாலினைப் புகழும் திருவொற்றியூர் மக்கள்
சென்னை: தடை இல்லாத மின்சாரத்தைப் பெறும் தொகுதியாக மாறியுள்ளது திருவொற்றியூர். இப்பகுதி சென்னையிலுள்ள பழமையான கடற்கரை நகரங்களில் ஒன்று.
இந்தப் பகுதியில் எண்ணூர் அனல்மின்நிலையம், அசோக் லைலண்ட், எம்.ஆர்.எஃப் டயர், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உர தொழிற்சாலை எனத் திரும்பிய திசை எங்கும் கனரக தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது.
பெரிய அளவில் மின்சாரத் தேவையைக் கொண்டுள்ள தொகுதி என இந்த விவரங்களைப் படிக்கும்போதே பலருக்கும் புரிந்திருக்கும்.
இத்தொகுதிக்குத் தடை இல்லாத மின்சாரம் வழங்குவது என்பது சவாலான காரியம். அதைக் கச்சிதமாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், பதவிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்து கொடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் பார்வைக்கு அவர் பரிந்துரைத்த கோரிக்கைகளை ஏற்று மின்னல் வேகத்தில் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

10 ஆண்டுக்கால ஆட்சியில் முடங்கிக் கிடந்த ஊர்:
கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் முற்றிலும் முடங்கிக் கிடந்த இத்தொகுதி இப்போது எப்படி புதிய ஒளியைப் பெற்றுள்ளது? அதைப் பற்றி திருவொற்றியூர் உதவி செயற்பொறியாளர் உதயசூரியன், "எங்கள் உபகோட்டத்திற்கு உட்பட்டு 5 மின் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழாக சுமார் 300 டிரான்ஸ்ஃபார்மர்கள் இயங்கி வருகின்றன.
மேற்கண்ட 5 துணைமின் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. எங்கள் பகுதியில் அதிகமான குடிசை வாழ் மக்கள் வசித்துவருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
குறிப்பாக எண்ணூருக்கு உட்பட கிரிஜா நகர், திவேதி அம்மன், அன்னை சிவகாமி நகர் ஆகிய பகுதிகளில் பழைய மின்மாற்றிகள் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதனால் மின் தடை என்பதே வராமல் தடுக்கப்பட்டுள்ளது.
அதைப்போலவே எண்ணூர் பகுதியில் 70% பழைய மின்மாற்றிகள் குறைந்தது 60 மின்மாற்றிகளை ஆர்.எம்.கே.வி ஆக மாற்றி அமைத்துள்ளனர். இதனால் அடிக்கடி ஏற்படும் power tripping ஐ சரிசெய்துள்ளோம்.

தொழிற்சாலைகள் நிறைந்த திருவொற்றியூர் நகரம்:
எண்ணூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கே இந்துஜா பவுண்டரி, அசோக் லைலண்ட், இஐடி பாரிஸ் செயல்பட்டு வருகின்றன. இவை இல்லாமல் ஒரு பிரபல மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது.
ஆகவே அதிக கவனம் எடுத்து இந்தத் தொகுதியில் உள்ள மின்துறை பழைய உபகரணங்களை மாற்றி அமைத்து, கடந்த கொரோனா காலகட்டத்திலும் வேலைகளைத் தீவிரப்படுத்தி மின் தடை இல்லாமல் மாற்றி அமைத்திருக்கிறோம்.
இங்கே மூன்று மின் தடை மையங்கள் 24x7 மணிநேரமும் செயல்பட்டுவருகின்றன. வரும் புகார்களை உடனடியாக கவனிக்க மூன்று ஷிப்ட் போட்டு ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள். விரைவில் ஒரு புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உயர்மின் அழுத்தம் கொண்டு செல்வதற்கான மின் பாதைகளும் நடைபெற உள்ளன" என்கிறார்.
"எங்கள் பகுதியில், கடந்த 15 வருடக்கால வரலாற்றில் இந்த மழைக்காலத்தின் போதுதான் மின் தடையே இல்லாமல் இருந்துள்ளது. அதற்கு பில்லர் பாக்ஸை வெள்ளத்தில் மிதக்காத அளவுக்கு உயரப்படுத்தி அமைத்ததுதான் முக்கிய காரணம்.
அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால் அந்தப் பெட்டிகளுக்குள் நீர் புகுந்துவிடும். அதன் பிறகு அந்த நீர்வடியும் வரை மின்சாரம் சீராக வழங்கப்படாது. ஆகவே பல அவஸ்தைகளை அனுபவித்து வந்தோம்.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை ஆண்டில் முழுமையாக இந்தப் பகுதி மின் தடை என்பதே இல்லாத அளவுக்கு முன்னேறி உள்ளது. பொதுவாக ஆட்சிக்கு வருபவர்கள் தென் சென்னையை மையமாக வைத்தே வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்று தருவார்கள். அப்படி இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் குறைகளைக் கேட்டு, அதற்கு ஒரு விடிவை ஏற்படுத்தித் தந்துள்ளார்" என்கிறார் இந்தப் பகுதிவாசி ஒருவர்.
எண்ணூர் துணை மின்நிலையத்தின் பராமரிப்பாளர் உதவிப்பொறியாளர் அனிதா, "எண்ணூர் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்ட போது உருவாக்கப்பட்ட துணை மின் நிலையத்தில்தான் நான் பணியாற்றி வருகிறேன்.

புதியதாக மாற்றி அமைக்கப்பட்ட 737 பில்லர்கள்:
இது 1956இல் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான நிலையம். இங்கு இருந்துதான் மீஞ்சூர் வரை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே பல உபகரணங்களின் தர அளவை உயர்த்த வேண்டி இருந்தது. மேலும் பல நவீன உபகரணங்களை அமைக்கவேண்டிய தேவையும் எழுந்தது.
அதை உணர்ந்து அதற்கான கோப்புகளை அனுப்பி வைத்தோம். முதலமைச்சர் ஸ்டாலின் எல்லா கோப்புகளையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு அனுமதி வாங்கியுள்ளார். பழைய நிலையிலிருந்து இப்போது இந்த மின் நிலையம் நவீனமாகி வருகிறது" என்கிறார்
காலடிப்பேட்டை உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வன், "எங்கள் பகுதியில் இதுவரை இயங்கிவந்த பழைய 46 டிரான்ஸ்ஃபார்மர்களை Ring main unit (rmu) ஆக மாற்றி அமைத்துள்ளோம். இன்னும் 11 மட்டுமே மாற்றவேண்டியுள்ளன. இந்த உபகரணம் மிகவும் நவீனமானது. பழைய டிரான்ஸ்ஃபார்மர்களில் காகங்கள் உட்காருவதால் மின் வெட்டு ஏற்படும். மழைக்காலங்களில் மரங்கள் முறிந்துவிழுவதால்கூட மின் தடை ஏற்படும்.
மேலும் இந்த முறை உபகரணத்தில் அடிக்கடி மின் பொறிகள் தெரித்து விழும். பார்க்கவே ஆபத்தான தோற்றத்தை ஏற்படுத்து. ஆனால் இந்த ஆர்.எம்.யு. அப்படி அல்ல. நவீனமானது பெட்டி போலச் சாலையில் இருக்கும். பார்வைக்கும் அழகாகத் தெரியும்.
மின்கசிவு, பறவைகளால் ஏற்படும் மின்வெட்டு எனப் பலவற்றிலிருந்து இந்த முறை கருவிகள் விடுதலையைத் தந்துள்ளன. 11 கே.வி பாதையில் ஒரு நாள்கூட கடந்த மழையின் போது மின்வெட்டே இல்லாமல் வழங்க முடிந்துள்ளது. 100% மின்வெட்டு இல்லாத அளவுக்கு இந்த மழைக்காலத்தில்கூட பார்த்துக்கொண்டோம்.
எங்கள் ஏரியாவில் 737 பில்லர்கள் உள்ளன. அனைத்தையும் உயர்த்தி அமைத்துவிட்டோம். அதில் பழுதாகி இருந்த அனைத்து உபகரணங்களையும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் முழுமையாக மாற்றித் தந்துள்ளோம்.

மழைவெள்ளத்திலும் நடந்த அமோகமான வியாபாரம்:
இரண்டு டிரான்ஸ்ஃபார்மர்கள் அதன் தாங்கும் சக்தியைவிட அதிக அளவுக்கான அழுத்தத்தை ஏற்று இருந்தன. ஒரு டிரான்ஸ்ஃபார்மர் பழுதானால் அதன் 60% அழுத்தத்தையும் சேர்ந்து தாங்கும் அளவுக்கு இன்னொரு டிரான்ஸ்ஃபார்மரின் கொள்ளளவு கூடுதலாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் எந்த மாதிரியான விபத்தும் நேராது. இப்படி அதிக அழுத்தத்தைத் தங்கிக் கொண்டு இயங்கிவந்த 2 டிரான்ஸ்ஃபார்மர்களை மாற்றி அமைத்துள்ளோம். ஆகவே மின் தேவையைவிட அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது." என்கிறார்.
இப்பகுதி நுகர்வோர் ஜோதி பிரகாஷ், "நாங்கள் 50 வருடங்களாக இந்தப் பகுதியில் வாழ்ந்துவருகிறோம். 25 வருடங்களாக பேக்கரி நடத்தி வருகிறோம். பேக்கிரி தொழிலுக்கு மிகமிக முக்கியமே மின்சாரம்தான். கடந்த ஆட்சிக்காலத்தின் போது நிறைய மின் பற்றாக்குறை இருந்தது. அதற்காகவே நாங்கள் இன்வெட்டர் எல்லாம் வாங்கி அமைத்தோம். ஆனாலும் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியாமல் தவித்து வந்தோம்.
இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் மின் தேவை அனைத்தையும் அரசு செய்து கொடுத்துள்ளது. பழைய மாதிரியான எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்வெட்டர் தேவையே குறைந்துவிட்டது. நிம்மதியாக வியாபாரம் செய்து வருகிறோம்.

அரைமணிநேரத்தில் சீரான ஒரு லட்சமாவது புகார்:
இந்த வெள்ள நேரத்தின் போதுகூட மின்வெட்டு இல்லை. மழை வெள்ளத்தின் போதுதான் நிவாரணத்திற்காக நிறையப் பேர் பேக்கரி ஐட்டங்களை வாங்கி பொதுமக்களுக்கு வழங்குவார்கள். அப்போது மின்சாரம் இல்லை என்றால் ஆர்டர் வாங்க முடியாது. பயந்துபோய் இருந்தோம்.
இந்த மழைக்கு நல்ல வியாபாரம். ஒருநாள் கூட மின்சாரம் துண்டிக்கப்படவே இல்லை. என் வாழ்நாளில் மின் தடையே இல்லாமல் வியாபாரம் பார்த்த மழைக்காலம் இதுதான். அதற்கு முதலமைச்சர் ஸ்டானிலுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்" என்கிறார்.
" மின்னகம் மூலம் பெற்றுவந்த ஒரு லட்சமாவது அழைப்பு எனக்கானது அதனை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அட்டன் செய்தார். இதனைத் தொடர்ந்து இரவு ஒன்பது மணிக்கு எனக்கு அழைப்பு வந்தது. அந்தப் புகாரை ஏற்று இரவு 9:30க்குள் சரிசெய்து கொடுத்தோம். அந்தப் பகுதி மக்களுக்கு மிகவும் சந்தோஷம். உடனடியாக இப்படிச் செய்து கொடுத்ததைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போனார்கள்" என்றார் மின் ஊழியர் ஒருவர்.
தண்டையார்பேட்டை executive engineer ஆக பணிபுரியும் ஜெகதீஷ் குமார், "தடை இல்லாமல் மின்சாரம் வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு அதிகாரியை நியமித்துள்ளார். இந்தப் பகுதியின் அதிகாரியாக நான் பணியாற்றி வருகிறேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மாதம் ஒரு கூட்டம்:
குறிப்பாகச் செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு இந்தப்பகுதியின் அனைத்து தேவைகளையும் நுகர்வோர் நலன் சார்ந்து யோசித்து நிறைவேற்றித் தந்துள்ளார். மாதாமாதம் அவரது தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பல்வேறு பிரச்சனைகள் அலசி ஆராயப்பட்டு வருகின்றன. அதன் பயனாக இந்தப் பகுதி துணைமின் நிலையங்கள் தரத்திலும், தொழில்நுட்பத்திலும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது" என்கிறார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications