’பொக்கிஷத்தின் சாவி’ வார்த்தையை விட்ட மோடி.. வரிந்து கட்டிய ஸ்டாலின்! குறுக்கே வந்துட்டாரே வாசன்..!
சென்னை: ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியதை தமிழர்களுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசி, தவறாக தமிழக மக்களுக்கும், ஒடிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வரின் அறிக்கை அப்பட்டமான பொய் என தமாக தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி பூரி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்களிடம் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை இருக்கிறது.

பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோயில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்" என விமர்சித்து இருந்தார்.
பிகே பாண்டியன்: ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மதுரையைச் சேர்ந்தவருமான விகே பாண்டியனின் பெயரை தான் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு விகே பாண்டியனும் எதிர்வினையாற்றினார். கெந்தரபாடாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பி.கே.பாண்டியன், நவீன் பட்நாயக்கின் தூய்மையான இமேஜ் பற்றி உலக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கடவுளை வைத்து அரசியல் செய்ய மாட்டோம். மோடியிடம் அதிகாரிகள் உள்ளார்.. கண்டுபிடிக்கப்பட்டும்" என கூறினார்.
முக ஸ்டாலின்: இதற்கிடையே மோடியின் பேச்சு தமிழர்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதுதொடர்பான பதிவில்," தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை. ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.
காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?: இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும். ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
இரட்டை வேடம்: தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என கூறியிருந்தார்.

ஜிகே வாசன்: இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிக்கை அப்பட்டமான பொய் என தமாக தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தமிழர்களுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசி, தவறாக தமிழக மக்களுக்கும், ஒடிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வரின் அறிக்கை அப்பட்டமான பொய்.
தேர்தல் அரசியல்: அதாவது பிரதமர் பேசியப் பேச்சுக்கும் முதல்வர் அதற்கு கூறும் அர்த்தமும், குற்றச்சாட்டும் தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி மற்றும் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீது தேவையில்லாமல் ஒரு அவதூறை ஏற்படுத்தியிருக்கிறது." என பதிவிட்டுள்ளார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications