தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று - ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய், சீமான் ராசிபலன் என்ன சொல்கிறது?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 234 தொகுதிகளுக்கான வாக்குகள் 39 இடங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை பணிக்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர் மற்றும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றைய முடிவுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக ஆட்சியை தீர்மானிக்கும்.

DMK Vijay TVK election politics 2026 TN Election 2026 Results Stalin Horoscope Today EPS Raasi Palan Vijay Astrology Prediction Seeman Horoscope Election Day tn assembly election 2026 results today tamilnadu election results may 4 stalin eps vijay seeman horoscope today stalin raasi palan election day eps astrology prediction 2026 vijay tvk horoscope today seeman ntK raasi palan tamilnadu assembly election counting 85 percent voter turnout tamilnadu 2026 stalin kolathur constituency eps edappadi constituency vijay perambur trichy east seeman karaikudi constituency dmK aiadmk tvk ntk contest 2026 4 2026 234 85 2026 2026

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இன்றைய முடிவுகள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர்களாக விளங்கும் ஸ்டாலின், ஈபிஎஸ், விஜய், சீமான் ஆகியோரின் ராசிபலன் இன்று என்ன சொல்கிறது?

ஸ்டாலின் ராசிபலன்

சென்னை கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் ஸ்டாலின் சிம்ம ராசிக்காரர். இன்று அவருக்கு உற்சாகமான நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளது.

ஈபிஎஸ் ராசிபலன்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி மீன ராசிக்காரர். இன்று அவருக்கு எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அலுவலகத்தில் உற்சாகம் நிலவும். நிர்வாகிகளின் ஆதரவு கிடைக்கும்.

விஜய் ராசிபலன்

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் கடக ராசிக்காரர். இன்று அவருக்கு அனுகூலமான நாளாக இருக்கும். அரசு தரப்பில் எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவியின் தேவைகளை நிறைவேற்ற முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும், ஆனால் சலுகைகளும் கிடைக்கும்.

சீமான் ராசிபலன்

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் கும்ப ராசிக்காரர். இன்று அவருக்கு மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். கணவன் - மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற முடியும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

இன்று தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நாள். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மட்டுமல்ல, முதலமைச்சர் வேட்பாளர்களின் ராசிபலனும் அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசியல் சூழல் எப்படி மாறும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+