“செல்லூர் ராஜூ கேட்டால் எந்த அமைச்சரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்” - அப்பாவு பேச்சால் சிரிப்பலை!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து வருகிறார்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜுவை கேள்வி கேட்க, சபாநாயகர் அப்பாவு அழைத்தபோது, "நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் உங்களுக்கு ரெக்கமெண்டேஷன்" என்று தெரிவித்தார். இதைக் கேட்டு திமுக, அதிமுக எம்.எம்.ஏக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. செல்லூர் ராஜுவும் சத்தமாக சிரித்துவிட்டு பேசத் தொடங்கினார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "நீங்கள் கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள்" என்று தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும், 3 புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications