சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

60,000 பேர்.. திமுகவின் வெற்றிக்காக ஆவலோடு காத்திருக்கும் பெரும் "ஆசிரியர்" படை.. உருக்கமான காரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பி.எட் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் திமுகவின் வெற்றியை எதிர்நோக்கி ஆவலோடு காத்து இருக்கிறார்கள்.. இவர்களின் காத்திருப்புக்கு பின் 10 வருடம் ஏக்கம் காரணமாக பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சார களம் சூடுபிடித்து உள்ளது. முக்கியமாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளின் பிரச்சார களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி... உண்மையை போட்டுடைத்த இலங்கை! ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எங்களை ஆதரித்த இந்தியாவுக்கு நன்றி... உண்மையை போட்டுடைத்த இலங்கை!

இந்த நிலையில் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் திமுகவின் வெற்றியை தீவிரமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது.

அறிக்கை

அறிக்கை

இது தொடர்பாக தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் வெ.குமரேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, அரசு பள்ளிகள் மேன்மை பெறுவதற்காக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் சமச்சீர் கல்வி அடிப்படையில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பில் அறிமுகம் செய்தார் . இதனை பின்பற்றி, அண்டை மாநிலங்களும் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, மாணவர்களுக்கு கணினி கல்வியை வழங்கி வருகிறது .

வேலை

வேலை

தமிழகத்திலும் கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. கிட்டதட்ட 60,000 பேர் வேலைவாய்ப்பை நோக்கி காத்திருந்தனர் . ஆட்சி மாற்றத்திற்கு பின், கணினி கல்வி நிறுத்தப்பட்டது . 2011ம் ஆண்டு முதல் மாணவர்கள் நலன் கருதி கணினி கல்வியை அரசு தொடக்க வகுப்பில் கொண்டு வர வேண்டும் எனவும், இதன்மூலம் வேலையில்லா கணினி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பினை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

திமுக

திமுக

இந்த நிலையில், கணினி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில கழக துணை பொதுச்செயலாளர் திண்டுக்கல் ஐ பெரியசாமி அவர்களை சனிக்கிழமை சந்தித்து 60,000 கணினி ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை மனு அவரிடம் வழங்கப்பட்டது. அதில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வர வேண்டும், கணினி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கை

கோரிக்கை

கோரிக்கையை படித்த, அவர், கணினி ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் அவரது வேலை வாய்ப்பினை உறுதி செய்யப்பபடும், கணினி ஆசிரியர்கள் கோரிக்கை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்தார்.

உறுதி

உறுதி

கணினி ஆசிரியர்கள் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம். கணினி ஆசிரியர்களின் கோரிக்கை வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, திண்டுக்கல் நிர்வாகிகள் சிவராஜ், நாகேந்திரன், ஜான்பால், லாரான்ஸ், சத்தியமூர்த்தி மற்றும் சக கணினி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

English summary
TN B.Ed Computer teachers association expects DMK to win to get jobs in schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X