இலங்கை விவகாரம்:விசிக-பாஜக மோதல்; குடும்ப ஆட்சி அவலமா? ஒரே மதம் , நாடு பெரும்பான்மை வெறியின் விளைவா?
சென்னை: இலங்கையில் மக்கள் போராட்டம் எப்படி ஏற்பட்டது? குடும்ப ஆட்சியின் அவலத்தால் நிகழ்ந்ததா? ஒரே மதம், ஒரே நாடு எனும் பெரும்பான்மை வெறியால் ஏற்பட்ட விளைவா? என்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள், பாஜக இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே தூக்கி அடிக்கப்பட்டார். தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விரட்டப்பட்டுள்ளார். வரும் 13-ந் தேதி தாம் பதவியில் இருந்து விலகப் போவதாக கோத்தபாய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கோத்தபாய எங்கே?
மேலும் கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் இலங்கைக்குள் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. கோத்தபாய தப்பி ஓடியதாக சில வீடியோக்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

விசிக வன்னி அரசு
இலங்கை நிலைமைகள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: ஒரே நாடு- ஒரே மொழி- ஒரே மதம் என நாட்டை கட்டமைக்க முயற்சிக்கும் சர்வதிகாரிகள் யாரும் மக்களின் அறச்சீற்றத்திலிருந்தி தப்பித்து ஓடவும் முடியாது;ஒளியவும் முடியாது. இன்று இலங்கை. நாளை இந்தியா? இன்று பக்சே சகோக்கள்.நாளை மோடி சகாக்கள்?. இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டார்.

பாஜக நாராயணன் திருப்பதி
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், கேடுகெட்ட குடும்ப அரசியலை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், ஓட ஓட விரட்டுவார்கள் என்பதை இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் நேற்று உணர்த்தி விட்டார்கள். குடும்ப அரசியலை முன்னெடுப்ப்பவர்களுக்கு தமிழர்களின் எச்சரிக்கை மணி கேட்டிருக்கும் என நம்புகிறேன் என கூறியிருந்தார்.

ஹெச்.ராஜா/ வன்னி அரசு
இதேபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இதுதான் குடும்ப ஆட்சியின் அவலம். தமிழகமே ஜாக்கிரதை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வன்னி அரசு, குடும்ப ஆட்சியின் அவலமில்லை. கடந்த அரை நூற்றாண்டுகாலமாக ஒரேநாடு (இலங்கை) ஒரேமொழி (சிங்களம்)
ஒரே மதம் (பவுத்தம்) என பெரும்பான்மை வெறியுடன் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கோட்பாட்டை செயல்படுத்தியதால்
பக்சே சகோக்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி. நாளை மோடி சகாக்களுக்கும் ஏற்படும் என மீண்டும் பதிவிட்டுள்ளார். இத்தகைய கருத்து மோதல்களால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications