அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம்-. திமுக அரசு செம்ம நாடகம்..தமிழகம் திரும்பிய அண்ணாமலை பகீர்!
சென்னை: மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நாடகமாடுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இங்கிலாந்தில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, The New Indian Express ஊடகத்தில் வெளிவந்த செய்தியின்படி, மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2024 பிப்ரவரி மாதம், மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர் 7, 2024 வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தத்தைக் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான். கடந்த பத்து மாதங்களாக இது குறித்து வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு, தற்போது எதிர்ப்பு வருவதும், இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடுகிறது.
இதே மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில், தமிழக அரசின் டாமின் நிறுவனம், 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 47.37 ஹெக்டேர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கக் குத்தகை பெற்றுள்ளதையும், தற்போது டாமின் நிறுவனம் தனது குத்தகை உரிமத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதையும், மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ. நில அளவில், 1.93 சதுர கி.மீ அளவே பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.
டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து இட்டுவிட்டேன் என்று, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்காது!
மாநில அரசின் அனுமதியின்றி இதுபோன்ற சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என மாண்புமிகு பிரதமர் அவர்கள் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மதுரை அரிட்டாப்படி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications