காமெடி ஃபெலோ.. சுப்ரமணியன் சுவாமி காலில் விழ சொன்னது யார்? அண்ணாமலையை சாடிய காயத்ரி ரகுராம்
சென்னை: காலில் விழுந்து வணங்கினால்தான் என்னையை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அந்த மாதிரி ஏற்புதலே எனக்கு தேவையில்லை என அண்ணாமலை காட்டமாக பேசியிருந்த நிலையில், இது குறித்து காயத்ரி ரகுராம் அண்ணாமலையை சீண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் அண்ணாமலையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு
ஆமா அண்ணாமலை யாரு, தமிழகத்தில் பாஜக இருக்கா, எனக்கு அதை பற்றி எதுவுமே தெரியாதே, தமிழகத்தில் நான் பாஜகவை பார்த்தது கூட கிடையாது என விமர்சித்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமி கருத்து பற்றி அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, பெரியவர்களை தரக்குறைவாக பேசுவது எனக்கு பிடிக்காத ஒன்று. இவுங்க எல்லாம் ஓல்டு இந்தியா... நான் தான்.. என்னையை வந்து பார்த்தால்தான் ஏற்றுக்கொள்வேன் .. சுப்ரமணியன் சுவாமியை நான் இதுவரை பார்க்கவில்லை. பார்க்கவும் போவது இல்லை. எனக்கு எந்த காட்ஃபாதர் ஆசிர்வாதமும் தேவையில்லை. ஒருத்தரை போய் பார்த்து.. அவுங்க காலில் விழுந்து வணங்கினால்தான் என்னையை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அந்த மாதிரி ஏற்புதலே எனக்கு தேவையில்லை..
நாங்கள் மோடியையும் தமிழக மக்களையும் நம்பி அரசியல் செய்கிறோம். வெளியில் இருந்து எந்த விதமான சர்டிபிகேட்டும் பாஜகவுக்கு தேவையில்லை. அதேநேரத்தில் அவுங்க பயன்படுத்திய வார்த்தைகளை நான் பயன்படுத்த போவது இல்லை. ஒரு கட்சியின் உழைப்பை கொச்சைப்படுத்துவதை எப்போதும் அண்ணாமலையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். பாஜகவும் ஏற்றுக்கொள்ளாது. அதனால் பழம்பெருமை பேசினால் கட்சி வளராது" என்றார்.

காலில் விழுந்து வணங்கினால்தான் என்னையை ஏற்றுக்கொள்வார்கள் என்றால் அந்த மாதிரி ஏற்புதலே எனக்கு தேவையில்லை என அண்ணாமலை காட்டமாக பேசியிருந்த நிலையில், இது குறித்து காயத்ரி ரகுராம் அண்ணாமலையை சீண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது:- இந்த நடிப்பு போதாது னு, இந்த பொய் போதாது னு, இன்று கக்கன் போல் அரசியல் செய்வேன் என்று பெயரை இழுத்துள்ளார்.
ஒருவர் மீது சிறுநீர் கழிப்பதும், அவர்களுடன் மதிய உணவு உபசரிப்பதும், கால்களைக் கழுவுவதும் போன்ற நாடகம் தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாது. உன்னை பிராமண குழந்தைகளின் காலில் விழச் சொன்னது யார்? சுப்ரமணிய சுவாமியின் காலில் விழச் சொன்னது யார்? டிசைன் டிசைனா பொய், டிசைன் டிசைனா நடிப்பு காமெடி ஃபெலோ" என்று பதிவிட்டுள்ளார்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி!












Click it and Unblock the Notifications